Last Updated:
பிசிசிஐ விருது வழங்கும் விழாவில் கே. எல். ராகுலை பார்த்ததும் சஞ்சு சாம்சன் செய்த செயல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணி நடைபெற்று முடிந்த உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரை அற்புதமாக விளையாடி வென்றது. குறிப்பாக இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி பேட்ஸ்மேன்கள் ரன்கள் குவித்த விதம் ரசிகர்களை உற்சாக வெள்ளத்தில் ஆழ்த்தியது.
உலகக்கோப்பை வென்றுள்ள இந்திய அணிக்கு பாராட்டுகளும் விருதுகளும் குவிந்து வருகின்றன. அதனைத் தொடர்ந்து இந்திய அணி வீரர்கள் அடுத்ததாக நடைபெற உள்ள கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடருக்காக தயாராகி வருகிறார்கள். இந்த நிலையில் பிசிசிஐ சார்பாக விருது வழங்கும் நிகழ்ச்சி நேற்று டெல்லியில் நடைபெற்றது.
இதில் உலகக்கோப்பைகளை வென்ற இந்திய அணி வீரர்கள் கௌரவிக்கப்பட்டார்கள். விருது வழங்கப்பட்டு கொண்டிருந்தபோது சஞ்சு சாம்சனை பின்னால் இருந்த கே.எல். ராகுல் அழைத்தார்.
உடனடியாக கவனிக்காத சஞ்சு சாம்சன் எங்கே இருந்து அழைக்கிறார்கள் என்று திரும்பிப் பார்த்து உடனடியாக ராகுல் பக்கம் சென்று அவரை ஆரத்தழுவி அன்பை வெளிப்படுத்தினார்.
மேலும் சஞ்சு சாம்சன் இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட உள்ளார். இதனால் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


