ஈரானுக்கு எதிரான போர் குறித்து செய்தி வெளியிட்டதற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க ஊடகங்களை கடுமையாக சாடியுள்ளதாக கூறப்படுகிறது.
தவறான தகவல்களைப் பரப்பும் நிறுவனங்கள் மீது தேசத்துரோக குற்றச்சாட்டுகளை சுமத்த வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.
ட்ரூத் சோசியல் கணக்கில் ஒரு பதிவில், ஈரான் “அமெரிக்க ஊடகங்களை கையாண்டு தவறான தகவல்களைப் பரப்புவதாகவும், AI ஐப் பயன்படுத்துவதாகவும் ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
தவறான தகவல்
இதற்கிடையில், தவறான தகவல்களைப் பரப்புவதாகக் குற்றம் சாட்டப்பட்ட அமைப்புகளின் ஒளிபரப்பு உரிமங்கள் மறுபரிசீலனை செய்யப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

அமெரிக்க மத்திய தகவல் தொடர்பு ஆணையத்தின் தலைவர் பிரெண்டன் கார் அறிவிப்பையும் ட்ரம்ப் பாராட்டியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

