கிராண்ட்மா மோசஸுக்கு வண்ணங்களைக் கலக்கவோ, வரைவதற்கான மற்ற விதிகளோ தெரியாது. தன்னிடம் இருந்த பெயிண்ட்கள், சாதாரண பலகைகள், மற்றும் தீப்பெட்டிகளைக் கொண்டே ஆரம்பத்தில் ஓவியங்கள் வரைந்தார். அவர் நேரில் பார்த்து எதையும் வரையவில்லை. தனது இளமைக்கால நினைவுகளையும், பழைய கிராமத்து வாழ்க்கையையும் மட்டுமே கற்பனையாக வரைந்தார்.
அவரது 100-வது பிறந்தநாளை நியூயார்க் மாகாணம் `கிராண்ட்மா மோசஸ் தினம்’ (Grandma Moses Day) என்று அதிகாரபூர்வமாக அறிவித்துக் கொண்டாடியது. 1961-ஆம் ஆண்டு, டிசம்பர் 13-ஆம் தேதி, தனது 101-வது வயதில் அவர் இயற்கை எய்தினார்.

தனது வாழ்க்கையின் வசந்த காலத்தை 78 வயதில்தான் மோசஸ் தொடங்கினார். வலிகளும், இழப்புகளும், தளர்ந்த உடலும் அவரது கற்பனைக்குத் தடையாக இருக்கவில்லை.
எனவே, நாம் ஒரு புதிய தொழிலைத் தொடங்கவோ, படிக்கவோ, அல்லது கனவை நோக்கி ஓடவோ `காலம் கடந்துவிடவில்லை’.
நம் வாழ்க்கையின் மிகச்சிறந்த அத்தியாயம் இனிமேல்தான் எழுதப்பட உள்ளது என்ற நம்பிக்கையுடன் இன்றைய நாளைத் தொடங்குவோம்!

