• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || சிதறப்போகும் மத்திய கிழக்கு: “உடனே வெளியேறுங்கள்”

GenevaTimes by GenevaTimes
March 15, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || சிதறப்போகும் மத்திய கிழக்கு: “உடனே வெளியேறுங்கள்”
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



மத்திய கிழக்கில் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. அங்குத் தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கிடையே அங்குப் பிராந்திய போர் வெடிக்கும் ஆபத்து எழுந்துள்ள சூழலில், பல்வேறு நாடுகளில் இருந்தும் வெளியேறுமாறு அமெரிக்கா தனது குடிமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. இது பிராந்திய போர் ஆபத்துகளை அதிகரிப்பதாகவே இருக்கிறது.



இஸ்ரேல்- அமெரிக்கா இணைந்து கடந்த 29ஆம் திகதி ஈரான் மீது தாக்குதலை நடத்தியது. அதில் ஈரான் அதியுயர் தலைவர் கமேனி கொல்லப்பட்டார். 


அதன் பிறகு ஈரான் உடனடியாக வீழும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், ஈரான் தொடர்ந்து போரிட்டு வருகிறது. இதன் காரணமாக இந்த போர் 3ஆவது வாரத்தில் நுழைந்துள்ளது.


ஒரு பக்கம் ஈரான் மீது இஸ்ரேல் தொடர்ச்சியாகத் தாக்குதல்களை நடத்தி வருகிறது.. ஈரானின் முக்கிய இலக்குகளைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குகிறது. 


இன்னொரு பக்கம் இஸ்ரேலை நோக்கித் தாக்கும் ஈரான், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள பிற அமெரிக்கப் படைத் தளங்களை டார்கெட் செய்தும் தீவிரமாகத் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இதனால் அங்குப் பதற்றமான சூழல் நிலவுகிறது.


இதற்கிடையே இந்த மோதல் பிராந்திய போராக வெடிக்கும் ஆபத்து உருவாகியுள்ளது. ஈராக்கின் பாக்தாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரக கட்டிடம் மீது கடந்த சனிக்கிழமை (13) அன்று ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கிடையே அமெரிக்கக் குடிமக்கள் ஈராக்கை விட்டு வெளியேற புதிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 


அந்த எச்சரிக்கையில், அமெரிக்கக் குடிமக்கள் உடனடியாக இப்போதே ஈராக்கை விட்டு வெளியேற வேண்டும் என்று தூதரகம் திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளது.


இது தொடர்பாக அமெரிக்கத் தூதரகம், “ஈரான் ஆதரவு பயங்கரவாத போராளிக் குழுக்களால் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறார்கள். இதனால் ஈராக்கில் தங்கும் அமெரிக்கர்கள் தங்கள் முடிவுகளை மறுபரிசீலனை செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மத்திய கிழக்கு முழுவதும் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. அமெரிக்க இராணுவ மையங்களைக் குறிவைத்து ஈரான் தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தி வருகின்றன. 


இதனால் நிலைமை மோசமாகியுள்ள சூழலில், அமெரிக்கா இதுவரை 12க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து தனது குடிமக்களை வெளியேறுமாறு வலியுறுத்தியுள்ளது. அமெரிக்கா சனிக்கிழமையன்று ஓமானில் உள்ள அத்தியாவசியமற்ற அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது உறவினர்களை வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளது.


இது ஒருபக்கம் இருக்க.. ஈரானின் உர்மியா நகரில் பொதுமக்கள் பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 


ஈரான் இராணுவம், பொலிஸ் மற்றும் பாதுகாப்புத் தளங்களின் இருப்பிடங்கள் குறித்த விவரங்களை இஸ்ரேலுக்கு அனுப்பியதாக 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இப்படி மத்திய கிழக்கு மோதலில் நாளுக்கு நாள் ஏகப்பட்ட ட்விஸ்ட்கள் அரங்கேறி வருகிறது.


அதேநேரம், தற்போதைய சூழலில் போர் முடிவுக்கு வருவது போன்ற சூழல் எதுவும் தெரியவில்லை. ஒரு பக்கம் ஈரான் தலைமையை காலி செய்து, பொருளாதாரத்தை முடக்க அமெரிக்கா முயன்றது. 


ஆனால், அது ஈரானை மொத்தமாக காலி செய்ய போதுமானதாக இல்லை. ஈரான் நிலையாக நின்று திரும்ப அடிக்கிறது. 


இந்த சிக்கல் மேலும் சில வாரம் நீளும் என அஞ்சப்படுகிறது. அப்படி அதிகரித்தால் உலகளவில் பாதிப்புகள் ஏற்பட ஆரம்பிக்கும். மேலும், எப்போது வேண்டுமானாலும் பிராந்திய போராகவும் வெடிக்கும்.



Read More

Previous Post

ஹரி ராயா விடுமுறை: ரந்தாவ் பாஞ்சாங் எல்லையில் 50,000 பயணிகள் வருகை எதிர்பார்ப்பு; கூடுதல் வழித்தடங்கள் திறப்பு! | Makkal Osai

Next Post

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்… வாக்காளர்கள் வசதிக்காக 30 புதிய முயற்சிகள் அறிமுகம்! | India News (இந்தியா செய்திகள்)

Next Post
5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்… வாக்காளர்கள் வசதிக்காக 30 புதிய முயற்சிகள் அறிமுகம்! | India News (இந்தியா செய்திகள்)

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்... வாக்காளர்கள் வசதிக்காக 30 புதிய முயற்சிகள் அறிமுகம்! | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin