தான் கொல்லப்பட்டு விட்டதாக பரவி வரும் வதந்திகளை மறுக்கும் வகையில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு புதிய காணொளியொன்றை வெளியிட்டுள்ளார்.
ஜெருசலேம் அருகிலுள்ள ஒரு கஃபேவில் பதிவு செய்யப்பட்ட அந்த காணொளியில், நெதன்யாகு தேநீர் குடிப்பதையும், தன்னைப் பற்றிய வதந்திகளை நகைச்சுவையாக மறுப்பதையும் காணலாம்.
காணொளயில் அவர், “நான் இறந்துவிட்டேன்… தேநீருக்காக..என் மக்களுக்காகவும் நான் இறக்கத் தயாராக இருக்கிறேன்.என் விரல்களின் எண்ணிக்கையை எண்ணிப் பார்ப்பீர்களா?” என்று நகைச்சுவையாக கூறுகிறார்.
வதந்திகளுக்கு கிண்டல்
அதன் பின்னர் அவர் தனது இரு கைகளையும் உயர்த்தி விரல்களை எண்ணிக் காட்டுகிறார். இது, சமீபத்தில் வெளியிடப்பட்ட ஒரு அதிகாரப்பூர்வ காணொளியில் அவருக்கு ஆறு விரல்கள் இருப்பதாக சமூக வலைதளங்களில் பரவி வந்த வதந்திகளை கிண்டல் செய்வதற்காகச் செய்யப்பட்டதாக கருதப்படுகிறது.
אומרים שאני מה? צפו >> pic.twitter.com/ijHPkM3ZHZ
— Benjamin Netanyahu – בנימין נתניהו (@netanyahu) March 15, 2026
இந்த வதந்திகள் ஈரான் அரசுடன் தொடர்புடைய ஊடகங்களால் பரப்பப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு பரவி வந்த வதந்திகளைத் தடுக்கவும், தாம் நலமாக இருப்பதை காட்டவும் நெதன்யாகு இந்த காணொளியை வெளியிட்டதாகக் கருதப்படுகிறது.
இவ்வாறானதொரு பின்னணியில், அவர் இன்னும் உயிருடன் இருந்தால், அவரை கொல்லப் ஈரானின் புரட்சிகர காவல்படையினர் உறுதி எடுத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

