Last Updated:
பாகிஸ்தானில் ரமலான் மாதத்தில் நாள்தோறும் அறக்கட்டளைகள் சார்பில் இஃப்தார் உணவு வழங்குவது வழக்கமாக இருந்து வருகிறது. அதன்படி, இந்த ஆண்டும் கராச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மாலை வேளையில் உணவு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
பாகிஸ்தானில் எரிபொருள் தட்டுப்பாட்டால் உணவுப் பொருட்கள் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்த நிலையில், ரமலான் நோன்பையொட்டி அறக்கட்டளை மூலம் வழங்கப்பட்ட உணவைப் பெற மக்கள் குவிந்தனர்.
பாகிஸ்தானில் ரமலான் மாதத்தில் நாள்தோறும் அறக்கட்டளைகள் சார்பில் இஃப்தார் உணவு வழங்குவது வழக்கமாக இருந்து வருகிறது. அதன்படி, இந்த ஆண்டும் கராச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மாலை வேளையில் உணவு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இஃப்தார் உணவு வழங்கும் இடங்களில் வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. ஈரான் போரைத் தொடர்ந்து அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், இலவச உணவு வழங்கும் இடங்களில் மக்கள் அதிகளவில் குவிந்து வருவதாகக் கூறப்படுகிறது.
அமெரிக்கா – ஈரான் இடையிலான போர் காரணமாக ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிபொருள் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாட்டை சமாளிக்க, பாகிஸ்தான் அரசு பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளில் ஊழியர்களின் சம்பளத்தை 5 முதல் 30 சதவீதம் வரை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
Mar 15, 2026 12:06 PM IST
பாகிஸ்தானில் விண்ணை முட்டும் விலை… அறக்கட்டளை மூலம் வழங்கப்பட்ட உணவைப் பெற குவிந்த மக்கள்!


