• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

"நெதன்யாகு பேசுவது போல் ஏஐ வீடியோ?" – சர்ச்சைக்கு இஸ்ரேல் அரசு சொல்லும் பதில் என்ன?

GenevaTimes by GenevaTimes
March 15, 2026
in உலகம்
Reading Time: 1 min read
0
"நெதன்யாகு பேசுவது போல் ஏஐ வீடியோ?" – சர்ச்சைக்கு இஸ்ரேல் அரசு சொல்லும் பதில் என்ன?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இஸ்ரேலும், அமெரிக்காவும் சேர்ந்து ஈரான் மீது நடத்தி வரும் தாக்குதல் மூன்றாவது வாரத்தைத் தாண்டியுள்ளது. இத்தாக்குதலில் ஈரானும் தொடர்ந்து இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

அதோடு மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்காவின் தளங்கள் மீதும் தொடர்ந்து ஈரான் தாக்கி வருகிறது. இஸ்ரேல் மீது லெபனானில் உள்ள தீவிரவாத அமைப்புகளும் ராக்கெட் மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இத்தாக்குதல் காரணமாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சன் நெதன்யாகு தலைமறைவாக வாழ்ந்து வருகிறார். அவர் பூமிக்கு அடியில் சுரங்கப்பாதையில் மறைந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களாக அவர் வெளியில் வரவே இல்லை. நேற்று நெதன்யாகு அளித்திருந்த பேட்டி ஒன்றின் காணொலி வெளியாகி இருந்தது. அந்தக் காணொலியில் நெதன்யாகுவிற்கு கையில் 6 விரல் இருப்பது போன்று இருந்தது.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சன் நெதன்யாகு
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சன் நெதன்யாகு

இதனால் அந்த வீடியோ ஏ.ஐ. தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டு இருக்கலாம் என்றும், நெதன்யாகு போரில் கொலை செய்யப்பட்டுவிட்டார் என்றும் செய்திகள் வெளியாகின. இது தொடர்பான செய்தி தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் வைரலானது.

துருக்கியைச் சேர்ந்த ஒரு செய்தி நிறுவனம் இந்தச் செய்தியை வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. அந்தக் காணொலியின் பின்னணியில் உள்ள திரைச்சீலைகளின் நகர்வு உட்பட, இரண்டு இஸ்ரேலிய கொடிகள் பெரும்பாலும் அசையாமல் இருந்ததைச் சுட்டிக்காட்டி அந்தக் காணொலி செயற்கையாகத் தயாரிக்கப்பட்டு இருக்கலாம் என்று சமூக வலைத்தளப் பயனர்கள் தெரிவித்திருந்தனர். ஆனால் இச்செய்தியை இஸ்ரேல் வன்மையாக மறுத்துள்ளது.

இது தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில், ”பிரதமர் நெதன்யாகு இறந்துவிட்டதாக வரும் செய்திகள் போலியானவை. அதில் உண்மையில்லை. பிரதமர் நலமோடு இருக்கிறார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

காணொலியில் 6 விரல்கள் இருப்பது குறித்து விசாரித்தபோது, அந்தக் காணொலியில் தெரிந்த கூடுதல் விரல் என்பது கேமரா கோணம் மற்றும் ஒளியின் நிழலால் ஏற்பட்ட ஒரு மாயை ஆகும்.

அது AI வீடியோ அல்ல என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வெள்ளை மாளிகையில் இது தொடர்பாக பெரிய அளவில் பதற்றம் நிலவுவதாகக் கூறப்படும் புகார்களுக்கு எந்தவித அதிகாரப்பூர்வ ஆதாரமும் இல்லை என்று அமெரிக்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

`ஈரானும் இஸ்ரேலும் எப்படியான நண்பர்கள் தெரியுமா?’ – நட்பு, பகையான பின்னணி | Iran vs Israel

Read More

Previous Post

“பொழுதுபோக்கிற்கு இன்னும் ஈரானை 2–3 முறை தாக்குவோம்” – மேற்கு ஆசியாவில் பதற்றம் – Sri Lanka Tamil News

Next Post

“மத்திய கிழக்கு மோதல்களுக்கு மத்தியிலும் மின்சார விநியோகம் சீராக உள்ளது – பாடில்லா” – Malaysiakini

Next Post

“மத்திய கிழக்கு மோதல்களுக்கு மத்தியிலும் மின்சார விநியோகம் சீராக உள்ளது – பாடில்லா” – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin