Last Updated:
இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா உட்பட ஹோர்முஸ் நீரிணையை வழியாக எண்ணெய் பெறும் அனைத்து நாடுகளும் தங்களின் போர்க்கப்பல்களை அனுப்புமாறு டிரம்ப் அழைப்பு விடுத்திருந்தார்.
ஹோர்முஸ் நீரிணையை மீட்டெடுக்க போர்க்கப்பல்களை அனுப்புமாறு அமெரிக்கா விடுத்த அழைப்பை சீனா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் நிராகரித்துவிட்டன.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், உலக அளவில் எண்ணெய் போக்குவரத்திற்கு முக்கிய தடமான ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியது. இதனால், உலகம் முழுவதும் எண்ணெய் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா உட்பட ஹோர்முஸ் நீரிணையை வழியாக எண்ணெய் பெறும் அனைத்து நாடுகளும் தங்களின் போர்க்கப்பல்களை அனுப்புமாறு டிரம்ப் அழைப்பு விடுத்திருந்தார்.
இதனை திட்டவட்டமாக மறுத்துள்ள சீனா, ஹோர்முஸ் நீரிணை ஈரானுக்கு சொந்தமானது என்று குறிப்பிட்டுள்ளது.
இதே போன்று, பிரான்ஸை சேர்ந்த 10 கப்பல்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக வெளியான தகவலுக்கு அந்நாட்டு வெளியுறவுத்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.
இதனிடையே, ஐக்கிய அரபு அமீரகம், குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் எண்ணெய் கிடங்குகள் மற்றும் துறைமுகங்கள் அருகே உள்ளவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், ஐக்கிய அரபு அமீரகத்தின் கிழக்கு பகுதியில் உள்ள ஃபுஜாரியாவில் எண்ணெய் கிடங்குகளின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது.
ஹோர்முஸ் நீரிணை விவகாரம்: டிரம்ப் அழைப்பை நிராகரித்த சீனா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள்!


