Last Updated:
தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில / யூனியன் பிரதேச சட்டமன்ற தேர்தல் அட்டவணையை வெளியிடவுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி இன்று பிற்பகல் 3.30 மணிக்கு மேல் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அசாம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபைக்கான பதவிக்காலம் விரைவில் நிறைவடைகிறது.
இந்நிலையில், தமிழ்நாடு உட்பட 5 மாநிலங்களுக்கு தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், தேர்தல் ஏற்பாடு பணிகள் குறித்து தலைமை செயலாளர்கள் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.
அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு உட்பட 5 மாநிலங்களுக்கு இன்று தேர்தல் தேதி அறிவிக்கப்படவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
Delhi,Delhi,Delhi
Mar 15, 2026 10:09 AM IST


