Last Updated:
அமெரிக்க தாக்குதலையும் மீறி, இரண்டு ஈரானிய எண்ணெய் டேங்கர் கப்பல்களில் கார்க் தீவில் இருந்து 2 புள்ளி 7 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெயை ஏற்றியதாக ஈரான் கூறியுள்ளது.
மத்திய கிழக்குப் பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஈரானின் ஐ.ஆர்.ஜி.சி கடற்படை கடுமையான ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை நிகழ்த்தியுள்ளது.
ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் இரண்டு வாரங்களைக் கடந்து நீடித்து வருகிறது. பஹ்ரைனில் உள்ள அமெரிக்க தளங்களை ஈரான் குறிவைத்து தாக்குதல் நடத்தியது.
ஈராக்கில் உள்ள உம் காசர் துறைமுகம் அருகே அமெரிக்க டேங்கர் கப்பலான சஃபேசியா, ஆளில்லா விமானத்தால் தாக்கப்பட்டது.
இஸ்ரேலின் ஈலாட்டில் (Eilat) ஈரானிய ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.
அதே நேரத்தில், ஈரானின் மிக முக்கியமான எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவில் அமெரிக்கா கடும் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
அமெரிக்க தாக்குதலையும் மீறி, இரண்டு ஈரானிய எண்ணெய் டேங்கர் கப்பல்களில் கார்க் தீவில் இருந்து 2 புள்ளி 7 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெயை ஏற்றியதாக ஈரான் கூறியுள்ளது.