Last Updated:
பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு இந்தியன் பிஸினஸ் லீடர் விருதுகளை சிஎன்பிசி டிவி18 குழுமம், மும்பையில் நடைபெற்ற வண்ணமிகு நிகழ்ச்சியில் வழங்கியது. சிஎன்பிசி டிவி18 குழுமம் மும்பையில் விருதுகள் வழங்கியது.
ஐசிசி தலைவர் ஜெய் ஷா, டி20 உலகக் கோப்பையை வென்ற கேப்டன் சூர்யகுமார் உள்ளிட்டோரை சிஎன்பிசி டிவி 18 குழுமம் விருதுகளை வழங்கி கவுரவித்துள்ளது. இதில் கலந்துகொண்டு கம்பீர் பேசினார்.
பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு இந்தியன் பிஸினஸ் லீடர் விருதுகளை சிஎன்பிசி டிவி18 குழுமம், மும்பையில் நடைபெற்ற வண்ணமிகு நிகழ்ச்சியில் வழங்கியது. விளையாட்டுத் துறையில் இந்தியாவில் அண்மையில் நடைபெற்று முடிந்த டி20 உலகக் கோப்பை நாயகர்கள் கவுரவிக்கப்பட்டனர். விருதாளர்களுக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் விருதுகளை வழங்கி கவுரவித்தார்.
இந்திய கிரிக்கெட் வாரியத் தலைமைப் பொறுப்பை வகித்து பின்னர், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராக உயர்ந்துள்ள ஜெய் ஷாவுக்கு விளையாட்டுத் துறையில் மிகச் சிறந்த பங்களிப்பிற்கான ‘Outstanding Contribution to Sports’ விருது வழங்கப்பட்டது. உலகக் கோப்பையை வென்ற அணியின் கேப்டன் சூர்யகுமார்க்கு ‘Sports Leader of the Year’ விருது வழங்கப்பட்டது. டி20 உலகக் கோப்பையை வென்ற அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கு ‘Excellence in Sports’ விருதை பியூஷ் கோயல் வழங்கிப் பாராட்டினார்.
இந்த விழாவில் பேசிய கவுதம் கம்பீர், ஐசிசி தலைவர் ஜெய் ஷாவுக்குத் தனது நன்றியைத் தெரிவித்தார். “என் மீது நம்பிக்கை வைத்து இந்தப் பொறுப்பை வழங்கியதற்கும், எனது பின்னடைவுகளின் போது என்னுடன் உறுதுணையாக இருந்ததற்கும் ஜெய் பாய்க்கு நன்றி. என்னை வெற்றிகரமான பயிற்சியாளராக மாற்றிய இந்திய கிரிக்கெட் வீரர்கள் அனைவருக்கும் நன்றி,” என்று அவர் குறிப்பிட்டார்.
தனது பேச்சில் கம்பீர் குறிப்பிட்ட ‘பின்னடைவுகள்’ என்பது, டெஸ்ட் போட்டிகளில் அவர் எதிர்கொண்ட சவால்களைக் குறிப்பதாகத் தெரிகிறது. அவர் பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற பிறகு நடந்த தொடர்களில் ஒன்றில், நியூசிலாந்திடம் சொந்த மண்ணில் இந்தியா 0-3 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. அதன்பின் விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் அடுத்தடுத்து ஓய்வு பெற்றனர்.
இதனால் சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்காவிடம் 0-2 என இந்தியா தொடரை இழந்தபோது அவருக்குப் பின்னடைவாக அமைந்தது. இருப்பினும், வெள்ளை-பந்து கிரிக்கெட்டில் கம்பீர் செய்துள்ள சாதனைகள், அவரை இந்தியாவின் மிகச்சிறந்த பயிற்சியாளர்களில் ஒருவராக மாற்றியுள்ளது.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
Mar 14, 2026 10:21 PM IST

