Last Updated:
இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ்வுக்கு CNBC-TV18-ன் 21-வது இந்திய பிசினஸ் லீடர் விருது விழாவில் ‘இந்த ஆண்டின் சிறந்த ஸ்போர்ட்ஸ் லீடர்’ விருது வழங்கப்பட்டது. மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் சூர்யகுமார் யாதவ்வுக்கு இந்த விருதை வழங்கினார்.
டி20 உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு ஒலிம்பிக் தங்கம் அடுத்த பெரிய இலக்கு என்று இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்தார்.
இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்று அசத்தியிருக்கும் நிலையில் இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ்வுக்கு CNBC-TV18-ன் 21-வது இந்திய பிசினஸ் லீடர் விருது விழாவில் ‘இந்த ஆண்டின் சிறந்த ஸ்போர்ட்ஸ் லீடர்’ விருது வழங்கப்பட்டது. மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் சூர்யகுமார் யாதவ்வுக்கு இந்த விருதை வழங்கினார்.
விருது பெற்ற பின் பேசிய சூர்யகுமார் யாதவ், உலகக் கோப்பை தொடர்பான நினைவுகளை பகிர்ந்துகொண்டார். அதில், “டி20 உலகக் கோப்பை இந்தியாவில் நடப்பது தெரிந்ததும் மகிழ்ச்சியாக இருந்தாலும் இந்திய ரசிகர்கள் முன்னால் விளையாட சற்று பதற்றமும் இருந்தது. அழுத்தங்கள் இருந்தாலும் மகிழ்ச்சியாக விளையாடி கோப்பையை வென்றோம்.” என்றார்.
மேலும், கேப்டன்ஷிப் குறித்து கேள்விக்கு பதிலளித்த அவர், “எல்லோருக்கும் ஒவ்வொரு ஐடியா இருக்கும். சில நேரங்களில் களத்தில் எடுக்கப்படும் சில முடிவுகள் கைகொடுக்கும். அதேநேரத்தில் சில நேரங்களில் முடிவுகள் தவறாக செல்லலாம். ஆனால், களத்தில் நடப்பவற்றை களத்தில் விட்டுவிட வேண்டும். இல்லையென்றால், தேவையில்லாத தலைவலி தான். டிரெஸ்ஸிங் ரூமில் அனைவரின் பேச்சுக்கும் மதிப்பு கொடுக்க வேண்டும். ஏனென்றால் இலக்கு ஒன்றே. அதற்கு அனைவரது குரல்களுக்கும் மதிப்பளித்து செல்ல வேண்டும்” என்றும் சூர்யகுமார் யாதவ் பேசினார்.
#IBLA21 | Sports Leader Of The Year: Suryakumar Yadav, Captain, India T20 Cricket Team
– Looking forward to the LA Olympics, aiming for a GOLD, says SKY
-Adds lifting the T20 trophy was the most memorable moment as he shares dressing room insights before the big finals..… pic.twitter.com/tp97A7HM2p— CNBC-TV18 (@CNBCTV18News) March 14, 2026
இதேபோல், டி20 உலகக் கோப்பையை கையில் ஏந்தியதுதான் இந்த உலகக் கோப்பையில் தனக்கு சிறந்த தருணம் என்று பேசிய சூர்யகுமார் யாதவ் 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் போட்டிகளில் கிரிக்கெட் அறிமுகமாகும் போது, ஒலிம்பிக் தங்கத்தை வெல்வதை இந்திய அணி ஏற்கனவே தனது இலக்காகக் கொண்டுள்ளதாகவும் ஒலிம்பிக் சவாலுக்கான பயிற்சிகள் விரைவில் தொடங்கும் என்றும் பேசினார்.
Mumbai,Maharashtra


