• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

கலிபோர்னியாவில் இந்தியரின் நகைக்கடையில் கொள்ளை… ரூ.16 கோடி தங்கம், வைரம் மாயம்… | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
March 14, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
கலிபோர்னியாவில் இந்தியரின் நகைக்கடையில் கொள்ளை… ரூ.16 கோடி தங்கம், வைரம் மாயம்… | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Mar 14, 2026 6:44 PM IST

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சர்வசாதாரணமாக கொள்ளைச் சம்பவம் அரங்கேறி வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் அதை ஆமோதிக்கும் வகையில், நீதிமன்றம் வெளியிட்டுள்ள சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

நகைக்கடை கொள்ளை
நகைக்கடை கொள்ளை

அமெரிக்காவில் இந்தியருக்கு சொந்தமான நகைக் கடைக்குள் புகுந்து 16 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்துச் சென்றவர்கள் சுதந்திரமாக வெளியே சுற்றித் திரிவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. பெயருக்கு 4 பேர் மட்டும் கைது செய்யப்பட்ட நிலையில் மொத்த கும்பலும் கூண்டோடு சிக்குமா?

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சர்வசாதாரணமாக கொள்ளைச் சம்பவம் அரங்கேறி வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் அதை ஆமோதிக்கும் வகையில், நீதிமன்றம் வெளியிட்டுள்ள சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. சம்பவம் நிகழ்ந்து 9 மாதங்கள் கடந்தபோதும், போலீசார் துரித நடவடிக்கை எடுக்காததற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹாலிவுட் படத்தை மிஞ்சும் அளவுக்கு நிகழ்ந்த கொள்ளைச் சம்பவத்தில் நடந்தது என்ன?

கலிபோர்னியாவில் ஃப்ரீமாண்டில் குமார் என்ற பெயரில் நகைக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. அமெரிக்க வாழ் இந்தியருக்கு சொந்தமான இந்தக் கடைக்கு, கடந்த 2015 ஜூன் மாதம் 18ஆம் தேதி ஒரு கும்பல் வந்துள்ளது. சினிமா பாணியில் முகமூடி அணிந்துவந்த 20-க்கும் மேற்பட்டோர் திபுதிபுவென உள்ளே புகுந்துள்ளனர். கடைக்குள் நுழைந்ததும் சுத்தியல் மற்றும் சிறிய ரக கோடாரி போன்ற ஆயதங்களைப் பயன்படுத்தி நகைப்பெட்டிகளை உடைத்தெறிந்தனர். பின்னர், உள்ளே இருந்து தங்க நகைகள் மற்றும் வைர நகைகளை பைக்குள் அடைத்தனர். ஒரு நிமிடத்திற்குள் மொத்த கடையையும் வாரிச் சுருட்டிக்கொண்டு கொள்ளையர்கள் அங்கிருந்து வெளியேறினர்.

இதையும் படிங்க: ஒருதலை காதலால் இளம்பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த இளைஞர்… காதலிக்க மறுத்ததால் விபரீதம்…

அடுத்த கணமே வெளியே தயாராக நிறுத்திவைக்கப்பட்டிருந்த காரில் ஏறி, மின்னல் வேகத்தில் நாலாபுறமும் தப்பியோடினர். இது தொடர்பான விசாரணையில் 16 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. கடையில் இருந்த மொத்த நகைகளில், 80 சதவீதம் கொள்ளையடிக்கப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன், கொள்ளையர்கள் பயன்படுத்தியது திருட்டுக் கார் என்பதால் அவர்களை அடையாளம் காணுவதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அந்த கும்பலில் பெண்கள் சிலரும் இருந்தது பின்னர் தெரியவந்தது. தொடர்ந்து தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்திய போலீசார் சந்தேகத்தின்பேரில் 19 முதல் 20 வயதிற்கு உட்பட்ட 4 இளைஞர்களை மட்டுமே கைது செய்தனர். எஞ்சிய நபர்களை போலீசாரால் நெருக்கக்கூட முடியவில்லை. கலிபோர்னியாவில் தொடர்ந்து கொள்ளைச் சம்பவம் அரங்கேறி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதையும் படிங்க: மனைவி தூக்குப் போடுவதை பார்த்து ரசித்த சைக்கோ… உயிரிழப்பதை வீடியோ எடுத்த கொடூரன்…

இந்த நிலையில், 9 மாதங்களுக்கு முன்பு நிகழ்ந்த நகைக்கடை கொள்ளையில் ஈடுபட்ட மொத்த கும்பலையும் கைது செய்யாததற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நீதிமன்றம் சிசிடிவி காட்சியை வெளியிட்டு கண்டனம் தெரிவித்துள்ளது. கொள்ளைச் சம்பவத்தை தடுக்கும் நோக்கில் போலீசார் துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.

Read More

Previous Post

“மாதவிடாய்க்கால விடுப்பை கட்டாயமாக்கினால், மகளிரை வேலைக்கு எடுக்க நிறுவனங்கள் தயங்கலாம்” – உச்சநீதிமன்றம்

Next Post

மாணவர் தாக்கி காயம்: தலைமையாசிரியர் கைது | Makkal Osai

Next Post
மாணவர் தாக்கி காயம்: தலைமையாசிரியர் கைது | Makkal Osai

மாணவர் தாக்கி காயம்: தலைமையாசிரியர் கைது | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin