இந்தியாவை ரஷ்ய எண்ணெய் வாங்க அமெரிக்கா “அனுமதி’த்தது குறித்து ஈரான் கேலி செய்துள்ளது.
ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குகிறது என்று தான் இந்தியாவிற்கு கூடுதல் 25 சதவிகித வரி விதித்தது அமெரிக்கா. இந்தியா உடனான ஒப்பந்தத்தையும் தாமதம் செய்தது.
இப்போது ஈரான் போர் தொடங்கிய உடன் ரஷ்ய எண்ணெயை இந்தியா தற்காலிகமாக வாங்கிக் கொள்ளலாம் என்று அமெரிக்கா கூறியுள்ளது.

“ரஷ்ய எண்ணெயை இறக்குமதி செய்வதால் அமெரிக்க பல மாதங்களாக இந்தியாவை மிரட்டியது.
ஆனால், ஈரான் உடனான போர் தொடங்கிய இரண்டு வாரங்களில், இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளிடம் ரஷ்ய எண்ணெயை வாங்க சொல்லி அமெரிக்கா கெஞ்சுகிறது.
ஈரான் மீதான சட்டத்திற்குப் புறம்பான அமெரிக்காவின் போருக்கு ஆதரவளித்தால் ரஷ்யாவிற்கு எதிராக அமெரிக்காவின் ஆதரவு கிடைக்கும் என்று ஐரோப்ப நாடுகள் நினைத்தன. பாவம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
