Last Updated:
அமெரிக்கா – ஈரான் போர் காரணமாக இந்திய பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சி. சென்செக்ஸ் 1470 புள்ளிகள், நிஃப்டி 489 புள்ளிகள் சரிவு. மெட்டல், ஆட்டோ, வங்கித் துறை பங்குகள் பெரும் பாதிப்பு.
அமெரிக்கா – ஈரான் இடையிலான போர் காரணமாக இந்திய பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சியடைந்தன.
வாரத்தின் கடைசி நாளான வெள்ளிக்கிழமை 1470 புள்ளிகள் சரிந்து 74,563 என்ற அளவில் நிறைவடைந்தது. இந்த வாரம் மட்டும், சென்செக்ஸ் 4,350 புள்ளிகள் வரை வீழ்ச்சியடைந்துள்ளது. தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி (Nifty) 489 புள்ளிகள் சரிந்து 23,152 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது.
மெட்டல் (Metal), ஆட்டோ (Auto) மற்றும் வங்கித் துறை பங்குகள் இன்றைய வர்த்தகத்தின் போது பெரும் சரிவைச் சந்தித்தன. நடுத்தர மற்றும் சிறிய நிறுவனங்களின் பங்குகளை உள்ளடக்கிய மிட்கேப் மற்றும் ஸ்மால் கேப் குறியீடுகளும் தலா இரண்டரை சதவிகிதம் சரிவடைந்தன.
வெள்ளிக்கிழமை ஒரு நாள் மட்டும் முதலீட்டாளர்களுக்கு 10 லட்சம் கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்ட நிலையில், பங்கு சந்தையின் மொத்த மதிப்பு 440 லட்சம் கோடியிலிருந்து 430 லட்சம் கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது. இதேபோல இந்திய ரூபாயின் மதிப்பும் கடுமையாக சரிவடைந்தது, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் 24 காசுகள் சரிந்து 92 ரூபாய் 25 காசு என்ற அளவில் நிலைபெற்றது.

