Last Updated:
இத்திட்டத்தின் மூலம் 10 நாள் பயணமாக நிலவுக்கு செல்லும் வீரர்கள், அங்கு மனிதர்கள் வாழ்வதற்கான சூழல்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்வார்கள் என கூறப்பட்டு இருந்தது.
50 ஆண்டுகளுக்குப் பிறகு, நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் நாசாவின் ஆர்டெமிஸ்-2 திட்டம் பல முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், வரும் 1ஆம் தேதி ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
1970-க்குப் பிறகு நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் ஆர்டெமிஸ்-2 திட்டத்தை அமெரிக்காவைச் சேர்ந்த விண்வெளி ஆய்வு மையமான நாசா முன்னெடுத்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் 10 நாள் பயணமாக நிலவுக்கு செல்லும் வீரர்கள், அங்கு மனிதர்கள் வாழ்வதற்கான சூழல்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்வார்கள் என கூறப்பட்டு இருந்தது. இந்நிலையில், கடந்த மாதமே இத்திட்டத்தை செயல்படுத்த நாசா முயன்ற போது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், புளோரிடாவில் செய்தியாளர்களை சந்தித்த திட்ட இயக்குநர், ஏப்ரல் 1-ஆம் தேதி நிலவுக்கு மனிதர்களை சுமந்து செல்லும் ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என்றார். அடுத்த வாரத்தில் ராக்கெட் ஏவுதளத்திற்கு கொண்டு செல்ல திட்டமிட்டு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இதனையடுத்து, நிலவுப் பயணத்திற்காக 3 அமெரிக்கர்கள் மற்றும் 1 கனடா வீரர் மீண்டும் தனிமைப்படுத்தப்பட்டனர்.
50 ஆண்டுகளுக்கு பின்… நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் நாசாவின் ஆர்டெமிஸ்-2 திட்டம்.. எப்போது தெரியுமா?


