17 வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற உள்ளது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள், சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இதற்கு முன்னர் கடந்த 2012 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் கொல்கத்தா அணி சாம்பியன் பட்டத்தை பெற்றுள்ளது. சன்ரைசர்ஸ் அணி கடந்த 2016ஆம் ஆண்டு வார்னர் தலைமையில் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்றது.
நேருக்கு நேர்:
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைசர்ஸ் அணிகள் இதுவரை 27 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளது. அதில் இதுவரை கொல்கத்தா அணி 18 போட்டிகளிலும், சன்ரைசர்ஸ் அணி 9 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளது.
இதையும் படிக்க:
ஐபிஎல் 2024 இறுதிப்போட்டியில் வெல்லும் அணிக்கு எவ்வளவு பரிசு தெரியுமா?
டாஸ்:
சேப்பாக்கம் மைதானம் ஸ்பின்னர்களுக்கும், வெவ்வேறு வேகத்தில் பந்துவீசும் பவுலர்களுக்கு சாதகமான மைதானம் என்பதால் இந்த மைதானத்தில் அதிக ரன்கள் எடுப்பது அவ்வளவு சுபலமில்லை என்றே கூறலாம். எனவே முதலில் டாஸ் ஜெயிக்கும் அணி பந்துவீச்சையே தேர்வு செய்யும்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உத்தேச அணி:
ரஹ்மானுல்லா குர்பாஸ், சுனில் நரைன், வெங்கடேஷ் ஐயர், ஷ்ரேயாஸ் ஐயர், ரிங்கு சிங், ஆண்ட்ரே ரஸ்ஸல், ராமன்தீப் சிங், மிட்செல் ஸ்டார்க், ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி, நிதிஷ் ராணா/வைபவ் அரோரா
இதையும் படிக்க:
கொல்கத்தா ரசிகர்களை Silent ஆக்குவாரா பேட் கம்மின்ஸ்.. வெற்றி வாகை சூடப்போவது யார்?
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் உத்தேச அணி:
டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, ஹென்ரிச் கிளாசென், மார்க்ரம், நிதேஷ் குமார் ரெட்டி, அப்துல் சமத், ஷாபாஸ் அகமது, பேட் கம்மின்ஸ், புவனேஷ்வர் குமார், டி. நடராஜன், ராகுல் திரிபாதி/ஜெய்தேவ் உனத்கட்
ட்ரீம் 11 அணி:
டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, வெங்கடேஷ் ஐயர், ஸ்ரேயாஸ் ஐயர், ரின்கு சிங், ஹென்ரிச் கிளாசென், ஆண்ட்ரே ரசல், சுனில் நரைன், வருண் சக்ரவர்த்தி, ஷாபாஸ் அகமது, டி நடராஜன் ஆகிய வீரர்கள் இன்று சிறப்பாக செயல்படுவர் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)