• Login
Friday, March 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

வணிக பயன்பாடு சிலிண்டர் விநியோகம் 10 நாட்களில் சீரடையும்: மத்திய மந்திரி ஹர்தீப் சிங் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
March 13, 2026
in மலேசியா
Reading Time: 5 mins read
0
வணிக பயன்பாடு சிலிண்டர் விநியோகம் 10 நாட்களில் சீரடையும்: மத்திய மந்திரி ஹர்தீப் சிங் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி மேற்காசியாவில் கடந்த 12 நாட்களாக நடந்து வரும் கடுமையான மோதல் போக்கு தொடர்ச்சியாக பல்வேறு நாடுகளிலும் அத்தியாவசிய உபயோகத்திற்கான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இந்தியாவில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.60 மற்றும் வர்த்தக கியாஸ் சிலிண்டர் விலை ரூ.118 என அதிரடியாக உயர்ந்து மக்களை அதிர்ச்சியடைய வைத்தது.

சில இடங்களில் வணிக பயன்பாட்டுக்கான கியாஸ் சிலிண்டர் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்தியாவில் வீட்டு உபயோகத்திற்கான கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு எதுவும் இல்லை என மத்திய பெட்ரோலிய துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி 2 நாட்களுக்கு முன்பு கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், நாம் பல்வேறு வழிகளில் மற்றும் வெவ்வேறு இடங்களில் இருந்து இந்தியாவுக்கான எரிபொருள் இறக்குமதி செய்வது தொடர்ந்து நடந்து வருகின்றது. இந்தியாவில் சி.என்.ஜி. மற்றும் பி..என்.ஜி. ஆகிய வீட்டு உபயோகத்திற்கான கியாஸ் சிலிண்டர் வினியோகம் முழுமையாக பாதுகாக்கப்பட்டு உள்ளது.

அதனால், பயப்பட வேண்டிய தேவையில்லை என கூறினார். போர் சூழலிலும், ஆலைகளுக்கான 70 முதல் 80 சதவீத எரிபொருள் வினியோகம் இருக்கும் என அவர் கூறினார். எனினும், சிலிண்டர் பற்றாக்குறையால் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பெருமளவிலான ஓட்டல்கள் மற்றும் உணவு விடுதிகளை மூடக்கூடிய அபாய சூழல் காணப்படுகிறது. லட்சக்கணக்கானோர் வேலையிழப்பை சந்திக்க கூடும் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது

இந்த நிலையில், இந்தியாவின் எரிபொருள் நிலை பற்றி மத்திய பெட்ரோலிய துறை மந்திரி ஹர்தீப் சிங் மக்களவையில் இன்று விளக்கம் அளித்து பேசினார். அவர் கூறும்போது, வீட்டு உபயோக எரிவாயு விநியோகத்துக்கு முன்னுரிமை தரப்படுகிறது. பெட்ரோல் டீசல், மண்ணெண்ணெய், விமான எரிபொருள் இருப்பில் எந்த குறையும் இல்லை.

சமையல் கியாஸ் சிலிண்டர் உற்பத்தி கடந்த சில நாட்களில் 28 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டு உள்ளது. சிலிண்டர் விநியோக கால அளவில் மாற்றம் எதுவுமில்லை. நாட்டுக்கு தேவையான அளவுக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது என மத்திய மந்திரி ஹர்தீப் சிங் புரி விளக்கமளித்து உள்ளார்.

நவீன எரிசக்தி வரலாற்றில் உலகம் இதுபோன்ற தருணத்தை எதிர்கொண்டதில்லை. எனினும், உள்நாட்டு தேவைக்காக கியாஸ் சிலிண்டர் விநியோகம் தடையின்றி தொடரும். ஹார்மூஸ் ஜலசந்தி வழியே வரும் கச்சா எண்ணெய்யைவிட மாற்று வழியில் கூடுதல் எண்ணெய் வருகிறது.

சீரான எரிபொருள் விநியோகத்தை பெற பிரதமர் மோடியின் ராஜதந்திர முயற்சிகளே காரணம். கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு குறித்த வதந்தி பரவுகிறது. ஆனால், தடையின்றி கியாஸ் சிலிண்டர் கிடைக்க உறுதி செய்வோம் என அவர் தெரிவித்து உள்ளார்.

Previous articleஹார்மூஸ் ஜலசந்தியை தொடர்ந்து முடக்குவோம்… முதல் அறிக்கையில் சூளுரைத்த ஈரானின் புதிய உச்ச தலைவர்
Next articleசாலை விபத்தில் பாகிஸ்தானியர் பலி
tamiltamil



Read More

Previous Post

“அமெரிக்காவுக்குப் பாடம் புகட்டுவோம்”: பதவியேற்ற பின் மொஜ்தபா காமெனி விடுத்த முதல் அதிரடி எச்சரிக்கை! – Sri Lanka Tamil News

Next Post

இரண்டு சட்டமூலங்கள் சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர்

Next Post
இரண்டு சட்டமூலங்கள் சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர்

இரண்டு சட்டமூலங்கள் சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin