
தூய்மையான இலங்கை நிதியத்தின் (Clean Sri Lanka Fund) கீழ், மெட்ரோ பஸ் நிறுவனத்தினால் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பத்து புதிய பேருந்துகள் நேற்று ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தை வந்தடைந்தன. மாற்றுத்திறனாளிகளுக்கான பொதுப் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதையும், நாடு முழுவதும் உள்ளடக்கிய நடமாட்ட வசதிகளை (inclusive mobility) சீரமைப்பதையும் இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது

