இது தொடர்பாக ஏ.என்.ஐ. நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், மார்ச் 1ஆம் தேதி கச்சா எண்ணெய் நிரப்பிக்கொண்டு, 3ஆம் தேதி சவுதியின் ராஸ் தனுரா துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட லைபீரியா கப்பல், மார்ச் 8ஆம் தேதி ஹார்முஸ் ஜலசந்திக்குள் வந்தபோது, தனது கண்காணிப்பு அமைப்புகளை முடக்கியதாக சொல்லியுள்ளது. மேலும், இந்தக் கப்பல் நேற்று பிற்பகல் 1 மணிக்கு மும்பை துறைமுகத்திற்கு வந்ததாகவும் தகவல் சொல்லப்பட்டுள்ளது.


