ரூ.40 லட்சம் பெறுவது எப்படி? உதாரணமாக, ஒருவர் தினமும் ரூ.200 சேமித்து வந்தால், திட்டம் முதிர்ச்சியடைந்த பிறகு ரூ.40 லட்சத்திற்கு மேல் நிதி திரட்ட முடியும். இந்த கணக்கீட்டை சற்று விரிவாக பார்க்கலாம். ஒருவர் தினமும் ரூ.200 சேமித்து செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்தால், மொத்த மாதாந்திர முதலீடு ரூ.6,000ஆக இருக்கும். அதன்படி, மாதாந்திர முதலீடு 6,000, மொத்த மூலதன முதலீடு 15,12,000, மதிப்பிடப்பட்ட வட்டி (8.2%) 25,21,942, முதிர்ச்சியில் பெறப்பட்ட மொத்தத் தொகை 40,33,942 (தோராயமாக ரூ.40.33 லட்சம்) இருக்கும்.


