துணுக்காய் பிரதேச சபையின் வருமான வரி பரிசோதகரும் துணுக்காய் முத்துமாரி அம்மன் ஆலய தர்மகர்த்தாவும் தற்போது மாந்தை கிழக்கு பிரதேச சபையின் வருமான வரி பரிசோதகராக கடமையாற்றிய திருநாவுக்கரசு கிருபாகரன் பாம்புக்கடிக்கு இலக்காகி மரணமடைந்துள்ளார்.
துணுக்காய் பகுதியை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 55 வயதுடைய திருநாவுக்கரசு கிருபாகரன் என்பவரே இவ்வாறு பாம்புக்கடிக்கு இலக்காகி உயிரிழந்தவராவார்.
மேலதிக விசாரணை
இவர் மாந்தை கிழக்கு பிரதேச சபையின் வருமான பரிசோதகராக தற்போது கடமை ஆற்றி வருகிற நிலையில் நேற்று(11) துணுக்காய் பகுதியில் வயலின் வேலை செய்து கொண்டிருந்த போதே இவ்வாறு பாம்புக்கடிக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

உடலம் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இது தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

