எத்தனை முறை தோல்விகளை சந்தித்தாலும் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் தொடர்ந்து முயற்சி செய்யும் சிலர் மட்டுமே தாங்கள் நினைத்த வெற்றியை பெறுகிறார்கள். விகாஸ் டி நாகரின் வாழ்க்கையிலும் இதுதான் நடந்துள்ளது. 20 முறை தோல்விகளை சந்தித்த பிறகும் இன்று Happilo என்ற வெற்றிகரமான நிறுவனத்தை நடத்தி வருகிறார். உலர் பழங்கள், நட்ஸ், ஆரோக்கியம் நிறைந்த ஸ்னாக்ஸ் ஆகியவற்றில் முன்னனி நிறுவனமாக இது திகழ்கிறது. ஸ்டார்ட் அப் நிறுவனத்தை நடத்துவது ஓட்டப்பந்தயம் போன்றது அல்ல; அது மராத்தான் போன்றது எனக் கூறுகிறார் நாகர்.
கர்நாடகா மாநிலத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்தார் விகாஸ் டி நாகர். இவருடைய குடும்பத்தினர் காஃபி மற்றும் கரு மிளகை விளைவித்து வந்தனர். இவருடைய தந்தையும் சகோதரரும் சொந்தமாக விவசாயம் செய்வதை பார்த்து வளர்ந்த நாகருக்கு அப்போதே வளர்ந்து பெரியவன் ஆனதும் தொழில்முனைவோராக ஆக வேண்டும் என்ற ஆசை பிறந்தது. இன்று இவருடைய நிறுவனத்தின் மதிப்பு ரூ.500 கோடியாகும்.
சிம்பியோசிஸ் சர்வதேச பல்கலைகழகத்தில்(2008 – 2010) எம்பிஏ பயின்றுள்ள நாகர், தனது படிப்பை முடித்ததும் சில ஆண்டுகள் குடும்ப தொழிலை பார்த்து வந்தார். அதன்பிறகே 2016-ம் ஆண்டு வாக்கில் Happilo நிறுவனத்தை தொடங்கினார். இவருடைய நிறுவனத்தின் முதல் தயாரிப்பான ‘Trail mix’ மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று நல்ல பெயரை வாங்கி கொடுத்தது. .
2005-ம் ஆண்டு பெங்களூரு பல்கலைகழகத்தில் பி.எஸ்.சி கணினி அறிவியல் பிரிவில் பட்டப்படிப்பை முடித்த நாகர், ஜெயின் குழுமத்தில் சீனியர் இறக்குமதி மேலாளராக பணியாற்றினார். அங்கு சில காலம் பணிபுரிந்த பிறகு எம்பிஏ படிப்பதற்காக தனது வேலையை ராஜினாமா செய்தார். பின்னர் சாத்விக் ஸ்பெஷாலிட்டி ஃபுட்ஸ் (Satvikk Specialty Foods) நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனராக பணியாற்ற தொடங்கினார். இங்கு பணிபுரிந்த சமயத்தில் தான் பல அணுபவங்களை கற்றுக்கொண்டார். இவர் தொடங்கப் போகும் தொழிலுக்கு இது பெரும் உதவியாக இருந்தது.
இதற்கிடையில் அவர் தொடங்கிய 20-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் அனைத்தும் பெரும் தோல்வியடைந்தன. ஆனால் இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் தன்னுடைய தோல்வியிலிருந்து பாடத்தை கற்றுக்கொண்டு 2016-ம் ஆண்டு Happilo நிறுவனத்தை தொடங்கினார் நாகர். இந்த தொழிலை வெறும் ரூ.10,000 முதலீடு செய்தே அவர் தொடங்கியுள்ளார்.
Also read |
வாஷிங் பவுடர் நிர்மா.. 90களில் கலக்கிய பிரபல நிர்மா குழும உரிமையாளரின் சொத்துமதிப்பு இப்போ எவ்வளவு தெரியுமா?
தொழில் தொடங்கிய புதிதில் இவருடைய நிறுவனத்தில் வெறும் இரண்டு ஊழியர்கள் மட்டுமே பணியாற்றியுள்ளனர். இதுதவிர பிரபல தொலைகாட்சி ரியாலிட்டி நிகழ்ச்சியான Shark Tank India (சிறந்த தொழில்முனைவோர்களுக்கான தேடல் கொண்ட நிகழ்ச்சி இது) சிறப்பு நீதிபதியாக மார்ச் 2023-ம் ஆண்டு பங்கேற்றுள்ளார்.
.
&w=750&resize=750,375&ssl=1)
