Last Updated:
Air India fare hike | இந்த கூடுதல் கட்டணம் அவ்வப்போது ஆய்வு செய்யப்பட்டு, நிலைமைக்கு ஏற்ப மாற்றம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்காசியாவில் நிலவும் போர்ப்பதற்றத்தால் நாளை முதல் விமான கட்டணத்தை உயர்த்தவுள்ளதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்தியாவின் முன்னணி மற்றும் மலிவு விலை விமான சேவை நிறுவனங்களில் ஒன்றாக டாடா குழுமத்தின் ஏர் இந்தியா உள்ளது.
மேற்காசியாவில் நிலவும் போர்ப்பதற்றத்தால் விமான எரிபொருள் கட்டணம் அதிகரித்த நிலையில், அதனை ஈடுசெய்யும் விதமாக உள்ளூர் மற்றும் சர்வதேச விமான பயணக் கட்டணத்தை ஏர் இந்தியா தற்போது உயர்த்தியுள்ளது.
பல்வேறு வகைகளாக கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் உள்ளூர் விமான டிக்கெட் விலை 400 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டு நாளை முதல் அமலுக்கு வரவுள்ளது.

அதேபோல மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லும் விமானங்களுக்கு 4 ஆயிரத்து 500 ரூபாய் வரை கூடுதல் கட்டணமாக விதிக்கப்பட்டுள்ளது.
இந்த கூடுதல் கட்டணம் அவ்வப்போது ஆய்வு செய்யப்பட்டு, நிலைமைக்கு ஏற்ப மாற்றம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Mar 11, 2026 12:32 PM IST


