• Login
Wednesday, March 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

50 ஆண்டுகளில் முதல் அமெரிக்க எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு.. ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்த அதிபர் ட்ரம்ப்..! | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
March 11, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
50 ஆண்டுகளில் முதல் அமெரிக்க எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு.. ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்த அதிபர் ட்ரம்ப்..! | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Mar 11, 2026 9:13 AM IST

இந்த வரலாற்று சிறப்புமிக்க எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய திட்டம், அமெரிக்காவை மீண்டும் எரிசக்தி துறையில் உலகளவில் ஆதிக்கம் செலுத்தும் நாடாக மாற்றும் என்று ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

அமெரிக்காவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஒரு மாபெரும் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக, டெக்சாஸ் மாகாணத்தின் பிரவுன்ஸ்வில் பகுதியில் புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் திறக்கப்படுவதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் எரிசக்தி நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உடன் இணைந்து இந்த திட்டம் மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். இது அமெரிக்க வரலாற்றிலேயே மிகப்பெரிய முதலீட்டு ஒப்பந்தமாக பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் நாட்டின் எரிசக்தி தேவையில் தன்னிறைவு பெறுவதையும், தேசிய பாதுகாப்பை வலுப்படுத்துவதையும் நோக்கமாக கொண்டு இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த புதிய சுத்திகரிப்பு நிலையத்திற்கு ‘அமெரிக்கா ஃபர்ஸ்ட் ரிஃபைனிங்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இது உலகின் மிகவும் தூய்மையான சுத்திகரிப்பு நிலையமாக செயல்படும் என்று ட்ரம்ப் தனது சமூக வலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்த திட்டத்தின் மூலம் தெற்கு டெக்சாஸ் பகுதியில் ஆயிரக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவதோடு, பல பில்லியன் டாலர் மதிப்பிலான பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் நன்றி தெரிவித்துள்ளார்.

Donald J. Trump Truth Social 03.10.26 04:17 PM EST

America is returning to REAL ENERGY DOMINANCE! Today I am proud to announce that America First Refining is opening the FIRST new U.S. Oil Refinery in 50 YEARS in Brownsville, Texas. THIS IS A HISTORIC $300 BILLION DOLLAR DEAL —…


— Commentary Donald J. Trump Posts From Truth Social (@TrumpDailyPosts) March 10, 2026

இந்த வரலாற்று சிறப்புமிக்க எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய திட்டம், அமெரிக்காவை மீண்டும் எரிசக்தி துறையில் உலகளவில் ஆதிக்கம் செலுத்தும் நாடாக மாற்றும் என்று ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்தியாவின் ரிலையன்ஸ் நிறுவனத்தின் முதலீடு, இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவை மேம்படுத்துவதுடன், உலகளாவிய ஏற்றுமதி சந்தையிலும் அமெரிக்காவின் பிடியை வலுப்படுத்தும். போர் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும், தெற்கு டெக்சாஸ் பிராந்தியத்தில் ஒரு புதிய தொழில்புரட்சியை இந்த சுத்திகரிப்பு நிலையம் ஏற்படுத்தும் என்றும், இது அமெரிக்க எரிசக்தி மேலாதிக்கத்தின் அடையாளமாக திகழும் என்றும் அரசியல் மற்றும் பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர்.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
தமிழ் செய்திகள்/உலகம்/

50 ஆண்டுகளில் முதல் அமெரிக்க எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு.. ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்த அதிபர் ட்ரம்ப்..!

Read More

Previous Post

ஆபாச தகவல்கள் மற்றும் பலாத்கார மிரட்டல்: கோர்ட்டில் ஆஜரான நடிகை ரம்யா வாக்குமூலம் – Sri Lanka Tamil News

Next Post

அதிகாலை ஏற்பட்ட மின் தடையின் போது ஜெனரேட்டரை இயக்க முயன்ற 76 வயது முதியவர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தார் | Makkal Osai

Next Post
அதிகாலை ஏற்பட்ட மின் தடையின் போது ஜெனரேட்டரை இயக்க முயன்ற 76 வயது முதியவர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தார் | Makkal Osai

அதிகாலை ஏற்பட்ட மின் தடையின் போது ஜெனரேட்டரை இயக்க முயன்ற 76 வயது முதியவர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தார் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin