Last Updated:
வீட்டு உபயோக சிலிண்டர்கள் தடையின்றி விநியோகிக்கப்படுகிறது. முன்பதிவு செய்து ஒரு வார காலத்திற்குள் வீட்டு உபயோக சிலிண்டர்கள் டெலிவரி செய்யப்படுகின்றன.
எரிபொருள் தட்டுப்பாட்டால் தமிழ்நாட்டில் வணிக சிலிண்டர்கள் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
வளைகுடா நாடுகளில் நடைபெற்று வரும் போரால் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எரிபொருள் விநியோகம் தடைபட்டுள்ளதால், இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் சமையல் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக தமிழ்நாட்டில் எண்ணெய் நிறுவனங்கள் சிலிண்டர் விநியோகத்திற்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.
நெல்லை மாவட்டத்திலும் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர்கள் விநியோகம் குறைக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் நாள் ஒன்றுக்கு 2,000 மேற்பட்ட வணிக சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 500 சிலிண்டர்கள் மட்டுமே வழங்கப்படுகிறது.

நெல்லையில் வணிக சிலிண்டர் விநியோகம் குறைப்பு… வீட்டு உபயோகத்திற்கு புதிய இணைப்பு வழங்குவது நிறுத்தம்!

