• Login
Tuesday, March 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

உலக ஸ்லீப்பர் செல்களுக்கு ஈரானின் இரகசிய தூண்டுதல்! எச்சரிக்கும் அமெரிக்க உளவுத்துறை

GenevaTimes by GenevaTimes
March 10, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
உலக ஸ்லீப்பர் செல்களுக்கு ஈரானின் இரகசிய தூண்டுதல்! எச்சரிக்கும் அமெரிக்க உளவுத்துறை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி (Ayatollah Ali Khamenei) அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டு தாக்குதலில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஈரானின் நகர்வு குறித்து அமெரிக்கா எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

ஈரான் உலகெங்கிலும் உள்ள தனது “ஸ்லீப்பர் செல்கள்” (sleeper cells) அல்லது மறைமுகமான செயல்பாட்டாளர்களுக்கு இரகசியமான “செயல்பாட்டு தூண்டுதல்” (operational trigger) என்று கருதப்படும் குறியீட்டு செய்தியை அனுப்பியிருக்கலாம் என அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்க அரசு சட்ட நடைமுறையாக்க அமைப்புகளுக்கு அனுப்பிய உளவு எச்சரிக்கை அறிக்கையின்படி (federal government alert), ஈரானில் இருந்து தோன்றியதாக நம்பப்படும் மறைகுறியாக்கப்பட்ட (encrypted) தகவல்தொடர்புகளை அமெரிக்கா இடைமறித்துள்ளது.

ஸ்லீப்பர் செல் அறிவுறுத்தல்

இந்த தகவல்கள் பல நாடுகளுக்கு அனுப்பப்பட்டதாகவும், இணையம் அல்லது தொலைபேசி வலையமைப்பை பயன்படுத்தாமல் “மறைமுக செயல்பாட்டாளர்கள்” அல்லது ஸ்லீப்பர் செல்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்குவதற்காக இருக்கலாம் என அறிக்கை தெரிவிக்கிறது.

இந்த ஒளிபரப்பு (transmission) கமேனியின் மரணத்திற்குப் பிறகு (பெப்ரவரி 28, 2026 அன்று) விரைவாகத் தொடங்கியதாகவும், புதிய ஒரு ஒளிபரப்பு நிலையம் பல நாடுகளுக்கு சர்வதேச அளவில் மீண்டும் மீண்டும் செய்தியை அனுப்பியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது “முன்கூட்டியே நிலைநிறுத்தப்பட்ட ஸ்லீப்பர் செல்களை” செயல்படுத்த அல்லது அறிவுறுத்தல்களை வழங்குவதற்காக இருக்கலாம் என எச்சரிக்கை கூறுகிறது.

மேற்கத்திய நாடுகளில் பதிலடி

சில சர்வதேச ஊடகங்கள் இந்த எச்சரிக்கையை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளன.

இது ஈரான் மேற்கத்திய நாடுகளில் பதிலடி தாக்குதல்களைத் திட்டமிடலாம் என்பதற்கான அச்சத்தை அதிகரித்துள்ளது.

இதற்கு முன்பு, 2020ஆம் ஆண்டு ஈரான் ஜெனரல் காசிம் சுலைமானி (Qasem Soleimani) கொல்லப்பட்டபோதும் இதேபோன்ற ஸ்லீப்பர் செல் அச்சங்கள் எழுந்தன.

தற்போது நடந்துவரும் அமெரிக்கா – இஸ்ரேல் மோதல்களால் இந்த அச்சுறுத்தல் மீண்டும் உயர்ந்துள்ளது.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

Geng Adik Labu Besar கும்பலைச் சேர்ந்த 8 பேர் மீது குற்றச்சாட்டு | Makkal Osai

Next Post

T20 WC | டி20 உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ.131 கோடி பரிசு – பிசிசிஐ அறிவிப்பு | Sports News (விளையாட்டு செய்திகள்)

Next Post
T20 WC | டி20 உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ.131 கோடி பரிசு – பிசிசிஐ அறிவிப்பு | Sports News (விளையாட்டு செய்திகள்)

T20 WC | டி20 உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ.131 கோடி பரிசு - பிசிசிஐ அறிவிப்பு | Sports News (விளையாட்டு செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin