இந்நிலையில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கச்சா எண்ணெய் கொணு செல்லும் கப்பல்களை ஈரான் தடுத்து நிறுத்தினால் அந்நாட்டின் மீது ஏற்கனவே நடத்தப்பட்ட தாக்குதலை விட 20 மடங்கு கூடுதலாக தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக டிரம்ப் கூறுகையில், ஹர்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கச்சா எண்ணெய் கப்பல்களை தடுக்க ஈரான் ஏதேனும் முயற்சித்தால் அந்நாட்டின் மீது ஏற்கனவே நடத்திய தாக்குதலை விட 20 மடங்கு கூடுதல் தாக்குதலை அமெரிக்கா நடத்தும்.
ஈரானால் மீண்டும் கட்டமைக்க முடியாது எளிதான இலக்குகளை நாங்கள் அழிப்போம். மரணம், நெருப்பு மற்றும் கோபம் அவர்களை ஆட்சி செய்யும். ஆனால், இது எல்லாம் நடக்கக்கூடாது என்று நான் விரும்புகிறேன்
இவ்வாறு அவர் கூறினார்.
