• Login
Monday, March 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

அரபு நாடுகள் மீது ஈரான் நடத்திய தாக்குதலுக்கு லெபனான் கண்டனம்; ஆயுதங்களை ஒப்படைக்க ஹிஸ்புல்லாவுக்கு வலியுறுத்தல் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
March 9, 2026
in மலேசியா
Reading Time: 2 mins read
0
அரபு நாடுகள் மீது ஈரான் நடத்திய தாக்குதலுக்கு லெபனான் கண்டனம்; ஆயுதங்களை ஒப்படைக்க ஹிஸ்புல்லாவுக்கு வலியுறுத்தல் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பெய்ரூட் லெபனான் வெளிவிவகார துறை மந்திரி யூசெப் ரக்கி, அரபு நாடுகள் கவுன்சிலின் வெளியுறவு துறை மந்திரிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது, வளைகுடாவிலுள்ள அரபு நாடுகள், ஜோர்டான் மற்றும் ஈராக் மீது ஈரான் நடத்தும் தாக்குதல்களுக்கு லெபனான் சார்பில் கடுமையான கண்டனங்களை பதிவு செய்தேன் என கூறியுள்ளார்.

இதுபோன்ற பகைமையான செயல்கள் சர்வதேச விதிகள் மற்றும் தரநிலைகளை மீறும் செயலாகும் என்று கூட்டத்தில் வலியுறுத்தினேன் என்றார். இதேபோன்று, ஈரானை பாதுகாக்கும் வேலையில் ஈடுபட்டு லெபனானின் உச்சபட்ச நலன்களை புறக்கணிக்கும் வகையில் மீண்டும் ஹிஸ்புல்லா செயல்பட்டு கொண்டிருக்கிறது. போரில் எந்த பங்கும் இல்லாத லெபனானை போருக்குள் இழுக்கிறது. இது வருத்தத்திற்குரியது.

இதனால், இஸ்ரேல் ராணுவ நடவடிக்கைகளை தூண்டி விட்டு, லெபனானின் நகரங்களின் மீது தாக்குதல் நடத்தும் நிலையை உருவாக்கி உள்ளது. அதனால், ஹிஸ்புல்லா அமைப்பு உடனடியாக ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும். இதற்கான முடிவு லெபனான் அரசின் அவசரகால கூட்டத்தில் எடுக்கப்பட்டு உள்ளது என்று அவர் கூறினார்.

ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஈரானும் பதிலுக்கு இஸ்ரேலை தாக்கி வருகிறது. இந்த சூழலில், ஈரானுக்கு ஆதரவாக லெபனான் நாட்டில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பும் இஸ்ரேலுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. ஈரான் ஆதரவு பெற்ற இதன் தாக்குதலால், லெபனான் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.

இதுபற்றி லெபனான் சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்ட செய்தியில், நாடு முழுவதும் பல்வேறு இடங்களை இலக்காக கொண்டு இஸ்ரேல் இன்று தாக்குதல் நடத்தியது. இதில், 15 பேர் பலியாகி உள்ளனர். 15 பேர் காயமடைந்தனர்.

அமெரிக்காவால் பயங்கரவாத அமைப்பு என அறிவிக்கப்பட்ட, ஹிஸ்புல்லா அமைப்பு, இஸ்ரேல் மீது பதிலடி தாக்குதல்களை நடத்துவோம் என அறிவித்து உள்ளது. இதனால், லெபனான் தலைநைகர் பெய்ரூட் மற்றும் தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.



Read More

Previous Post

செல்வமகள் சேமிப்பு கணக்கு வச்சிருக்கீங்களா? மார்ச் 31-க்குள் இதை முடிங்க.. இல்லைன்னா கணக்கு முடங்கும்!

Next Post

சச்சின் சொன்ன அட்வைஸ்… ஃபீனிக்ஸ் பறவையாய் சஞ்சு சாம்சன் மீண்டு வந்தது எப்படி..?

Next Post
சச்சின் சொன்ன அட்வைஸ்… ஃபீனிக்ஸ் பறவையாய் சஞ்சு சாம்சன் மீண்டு வந்தது எப்படி..?

சச்சின் சொன்ன அட்வைஸ்... ஃபீனிக்ஸ் பறவையாய் சஞ்சு சாம்சன் மீண்டு வந்தது எப்படி..?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin