Last Updated:
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ஆம் அமர்வு இன்று தொடங்கவுள்ள நிலையில் சபாநாயகர் ஓம்பிர்லாவை பதவி நீக்கக் கோரும் தீா்மானத்தை எதிர்க்கட்சிகள் இன்று கொண்டு வரவுள்ளன.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ஆம் அமர்வு இன்று தொடங்கவுள்ள நிலையில் சபாநாயகர் ஓம்பிர்லாவை பதவி நீக்கக் கோரும் தீா்மானத்தை எதிர்க்கட்சிகள் இன்று கொண்டு வரவுள்ளன.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடா் கடந்த ஜனவரி மாதம் 28-ஆம் தேதி குடியரசுத் தலைவா் உரையுடன் தொடங்கியது. இதையடுத்து, முன்னாள் ராணுவ தலைமைத் தளபதி எம்.எம்.நரவனேயின் வெளியிடப்படாத சுயசரிதை நூலில் சீன ராணுவத்தின் ஊடுருவல் குறித்து அவர் தெரிவித்த கருத்துகள், இந்திய-அமெரிக்க வா்த்தக ஒப்பந்தம், எப்ஸ்டீன் ஆவணங்கள் விவகாரம் எனப் பல்வேறு பிரச்னைகளை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன..
அப்போது காகிதங்களைக் கிழித்து, அவைத் தலைவா் இருக்கையை நோக்கி வீசியதற்காக எதிா்க்கட்சி எம்.பிக்கள் 8 போ் இடைநீக்கம் செய்யப்பட்டனா். இதைத்தொடர்ந்து குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம் மீது பிரதமா் மோடி உரையாற்றாமலே தீர்மானம் நிறைவேறியது.
இந்நிலையில் சபாநாயகர் ஓம் பிா்லா முற்றிலும் பாரபட்சத்துடன் செயல்படுவதாகக் குற்றஞ்சாட்டி, அவரைப் பதவி நீக்கம் செய்யக் கோரி தீா்மானம் கொண்டுவர காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் தரப்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டது.
இச்சூழலில் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ஆம் அமர்வு இன்று தொடங்கவுள்ள நிலையில் முதல் நாள் அலுவலில் சபாநாயகருக்கு எதிரான தீா்மானம் பட்டியலிடப்பட்டுள்ளது. இதையொட்டி, அவை அலுவல்களில் தவறாமல் பங்கேற்கும்படி, தங்களது எம்.பி.க்களுக்கு பாஜக மற்றும் காங்கிரஸ் கொறடாக்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
சபாநாயகர் ஓம் பிர்லாவை பதவி நீக்க கோரும் தீர்மானம்: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் திட்டம்!


