Last Updated:
Hormuz Strait | “நாங்கள் இன்னும் ஹார்முஸ் ஜலசந்தியை மூடவில்லை. நாங்கள் அதை மூடப் போகிறோம் என்றால், அதை அறிவிப்போம்… அது எங்களால் மூடப்படவில்லை” என்று ஈரானின் வெளியுறவுத் துறை துணை அமைச்சர் டாக்டர் சயீத் காதிப்சாதே கூறுகிறார்.
ஈரான் அருகே உள்ள ஹார்முஸ் நீரிணையை தாங்கள் மூடவில்லை என அந்நாட்டு வெளியுறவு இணை அமைச்சர் சயீப் கதீப்சதே தெரிவித்துள்ளார்.
ஈரானுக்கும் ஓமன் நாட்டிற்கும் இடையே உள்ள 100 மைல் நீளமுடைய ஹார்முஸ் நீரிணை, மிக முக்கியமான கடல் வணிக போக்குவரத்து வழித்தடமாகும்.
அவ்வழியாக கப்பல்களில் நாள்தோறும் 20 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்படுகிறது. இது உலகின் மொத்த கச்சா எண்ணெய் தேவைகளில் 5-ல் ஒரு பங்காகும்.
இந்நிலையில் அதை ஈரான் மூடிவிட்டதாகவும் அதை மீறி எந்தக் கப்பலாவது சென்றால் தாக்கப்படும் என்றும் தகவல் வெளியானதால் அவ்வழியாக எண்ணெய்க் கப்பல்கள் இயக்கப்படவில்லை. இதனால் கச்சா விலை வரலாறு காணாத உயர்வைக் கண்டுள்ளது.
#WATCH | Delhi | “We have not yet closed the Strait of Hormuz. If we are going to close it, we are going to announce it…It has not been closed by us. We have no intention to do it until further notice,” says Dr Saeed Khatibzadeh, Iran’s Deputy Minister of Foreign Affairs. pic.twitter.com/13zzXLYINc
— ANI (@ANI) March 6, 2026
இந்நிலையில் இந்தியா வந்துள்ள ஈரானிய அமைச்சர், ஹார்முஸ் நீரிணையை மூடவில்லை எனத் தெரிவித்துள்ளார்.


