Last Updated:
வளைகுடா நாடுகளில் நிலவும் சூழல் காரணமாக, கச்சா எண்ணெய் விலை 9% உயர்ந்து 93 டாலராக உள்ளது. கத்தார் அமைச்சர் சாத் அல்-கபி, ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலியாக விலை 150 டாலராக உயரலாம் என எச்சரித்தார்.
வளைகுடா நாடுகளில் நிலவும் அசாதாரண சூழலால், கச்சா எண்ணெய் விலை இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
வளைகுடா நாடுகளில் உள்ள எண்ணெய் நிறுவனங்கள், ஒரு சில நாட்களில் தங்களின் உற்பத்தியை நிறுத்த நேரிடும் என்று கத்தார் எரிவாயுத் துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், கச்சா எண்ணெய் விலை கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 9 விழுக்காடு அதிகரித்து, ஒரு பேரல் 93 டாலராக உயர்ந்துள்ளது.
ஒரு வாரத்திற்கு ஈரான்-இஸ்ரேல் போர் தொடரும் பட்சத்தில், ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 150 டாலராக அதிகரிக்கக்கூடும் என்றும் கத்தார் அமைச்சர் சாத் அல்-கபி குறிப்பிட்டார்.
கச்சா எண்ணெய் போக்குவரத்தின் மையமான ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியதன் காரணமாக எண்ணெய் உற்பத்தியை ஓரிரு நாட்களில் வளைகுடா நாடுகள் நிறுத்தக் கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
ஏற்கெனவே, இங்கிலாந்தில் பெட்ரோல் விலை 3 விழுக்காடும், டீசல் விலை 6 விழுக்காடும் உயர்ந்துள்ளது. பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை 20 விழுக்காடு உயர்த்தப்பட்டுள்ளது.
ஈரான் – இஸ்ரேல் போர் தொடர்ந்தால் கச்சா எண்ணெய் விலை 150 டாலராக அதிகரிக்கக்கூடும் : கத்தார் அமைச்சர்


