ஈரான் தலைநகரமான தெஹ்ரானில் பல பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு நீடித்த வான்வழி தாக்குதல்கள் நடைபெற்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரானின் புரட்சிகர காவல் படையுடன் தொடர்புடைய செய்தி நிறுவனம், தெஹ்ரானின் தெற்கு பகுதியில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் எண்ணெய் கிடங்குகள் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து குண்டுவீச்சு நடத்தியதாக தகவல் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், இஸ்ரேலின் பாதுகாப்பு படை (IDF) தெஹ்ரானை நோக்கி “புதிய தாக்குதல்களின் அலை” ஒன்றைத் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது.
எண்ணெய் கட்டமைப்புகள்
ஈரானிய ஆட்சியின் கட்டமைப்புகளை குறிவைத்து இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், விரைவில் கூடுதல் விவரங்கள் வெளியிடப்படும் எனவும் IDF தெரிவித்துள்ளது.
‘شعلههای آتشسوزی پالایشگاه نفت #تهران‘
ویدیوی دریافتی: ‘شنبه ۱۶ اسفند ساعت ۲۲’#Iran #Tehran pic.twitter.com/0UhrqkItP9— Vahid Online (@Vahid) March 7, 2026
தற்போதைய போர் தொடங்கியதிலிருந்து, ஈரானின் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த எண்ணெய் கட்டமைப்புகள் மீது இஸ்ரேல் நேரடியாக தாக்குதல் நடத்தியதாக கூறப்படுவது இதுவே முதல் முறை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தாக்குதல்களால் ஏற்பட்ட சேதம் மற்றும் உயிரிழப்புகள் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமான முழுமையான தகவல்கள் வெளியாகவில்லை.
சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள காணொளிகளில் தெஹ்ரானின் தெற்கு பகுதியில் பெரிய தீப்பற்றி எரிவதைப் போன்ற காட்சிகள் பரவி வருகின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

