இந்தியாவின் உள்விவகாரங்கள் மற்றும் இறையாண்மை குறித்து அமெரிக்கா தலையிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், ஒரு சுதந்திர தேசமான இந்தியா எவ்வித வெளிநாட்டுக் கட்டளைகளுக்கும் பணியாது என்றும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பகிரங்கக் கடிதத்தில்,
“நாங்கள் (இந்திய மக்கள்) சுதந்திரமான மற்றும் இறையாண்மை கொண்ட தேசத்தைச் சேர்ந்தவர்கள். தொலைதூரத்திலுள்ள வெளிநாட்டுக் கரைகளிலிருந்து வரும் கட்டளைகளை நாங்கள் இனி ஒருபோதும் ஏற்கப்போவதில்லை.
எனவே, உங்களால் முடிந்தவரை உங்கள் சொந்த வேலையை மட்டும் கவனிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.”
இறையாண்மை கொண்ட நாடுகளுக்கு இடையிலான பரஸ்பர மரியாதை மட்டுமே நீடித்த உலகளாவிய அமைதிக்கு ஒரே அடித்தளமாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், அமெரிக்காவுக்கு அந்நாட்டு மக்களுக்கும் அமைதியும் வளமும் கிடைக்கப் பிரார்த்திப்பதாகவும் ஒரு பெருமிதமுள்ள இந்தியக் குடிமகன் மற்றும் மக்கள் நீதி மய்யத்தின் நிறுவுனர் என்று தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார். R

