வளைகுடாவில் அமெரிக்க ஏவுகணை பாதுகாப்பு பேட்டரிகளை(பாதுகாப்பு ஏவுகணை அலகு) இயக்குவதற்கான ஒரு முக்கிய ரேடார் அமைப்பை ஈரான் அழித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
300 மில்லியன் டொலர் மதிப்புள்ள ஒரு முக்கிய ரேடார் அமைப்பே இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகியுள்ளது.
இது எதிர்கால தாக்குதல்களை எதிர்கொள்ளும் பிராந்தியத்தின் திறனை மேலும் பாதிக்கும் அபாயம் உள்ளது என்று அமெரிக்க தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ளது.
THAAD பாதுகாப்பு அமைப்பு
போரின் தொடக்க நாட்களில் ஜோர்தானில் உள்ள முவாஃபாக் சால்டி விமான தளத்தில், அமெரிக்க THAAD ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளால் பயன்படுத்தப்படும் RTX கார்ப் நிறுவனத்தின் AN/TPY-2 ரேடார் மற்றும் துணை உபகரணங்கள் அழிக்கப்பட்டதை காட்டும் செயற்கைக்கோள் புகைப்படங்களும் தற்போது வெளியாகியுள்ளன.

ஜனநாயகப் பாதுகாப்பு அறக்கட்டளையின் சிந்தனைக் குழுவால் சேகரிக்கப்பட்ட தரவுகள், ஜோர்தானில் இரண்டு ஈரானிய தாக்குதல்கள் நடந்ததாகக் காட்டுகின்றன.
ஒன்று பெப்ரவரி 28 அன்றும் மற்றொன்று மார்ச் 3 அன்றும் இடம்பெற்றுள்ளன.
வெற்றிகரமாக நடந்த, THAAD ரேடார் மீதான ஈரானிய தாக்குதல் ஈரானின் இதுவரையிலான மிக வெற்றிகரமான தாக்குதல்களில் ஒன்றாக இருப்பதாகவும் குறித்த அமைப்பு தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

