ஈரான் தொடர்பான மத்திய கிழக்கு பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்க படைகள் மற்றும் இராணுவ தளபாடங்களின் நகர்வுகள் குறித்து ரஷ்யா ஈரானுக்கு உளவுத்துறை தகவல்களை வழங்கி வருவதாக அமெரிக்க உளவுத்துறை அறிக்கைகளை அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இது போர் சூழ்நிலையில் மொஸ்கோ நேரடியாக ஈடுபட முயற்சித்ததற்கான முதல் அறிகுறியாகக் கருதப்படுகிறது.
ரஷ்யாவின் அதிநவீன செயற்கைக்கோள்
அந்த உளவுத்துறை தகவல்களில் பெரும்பாலானவை ரஷ்யாவின் அதிநவீன மேல்நிலை செயற்கைக்கோள்களில் இருந்து பெறப்பட்ட படங்களாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இதற்குப் பதிலாக ரஷ்யா ஈரானிடமிருந்து என்ன பெறுகிறது என்பது இதுவரை தெளிவாக கண்டறியப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
கடந்த மூன்று ஆண்டுகளாக ரஷ்யா மற்றும் ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தொழில்நுட்பங்களில் ஒத்துழைத்து வருகின்றன.
ஈரானின் உதவிகள்
இதில் ஈரான், ரஷ்யாவுக்கு Shahed drone போன்ற ட்ரோன்கள் மற்றும் குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை வழங்கியதாகவும், ரஷ்யாவில் ஈரானிய வடிவமைப்பில் ட்ரோன்கள் தயாரிக்க தொழிற்சாலை அமைப்பதற்கும் உதவியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், சமீபத்திய நாட்களில் பல ஈரானிய ட்ரோன் தாக்குதல்கள் அமெரிக்க துருப்புக்கள் தங்கியிருந்த பகுதிகளை இலக்காகக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக குவைத்தில் அமெரிக்க துருப்புக்கள் இருந்த தற்காலிக இராணுவத் தளத்தை ஈரானிய ட்ரோன் தாக்கியதில் ஆறு அமெரிக்க சேவை உறுப்பினர்கள் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

