Last Updated:
“தனது சொந்த எரிசக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்ய இந்தியாவுக்கு ஏன் மற்றொரு நாட்டின் ஒப்புதல் தேவை?” என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கியதால், இந்தியாவிற்கு 50 விழுக்காடு அபராத வரி விதித்திருந்த அமெரிக்கா, ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தியதாக கூறி, அந்த வரியை ரத்து செய்திருந்தது.
இந்நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், எண்ணெய் போக்குவரத்தின் முக்கிய வழித்தடமான ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியது. இதனால், எண்ணெய் வர்த்தகத்தில் பெரும் அளவில் இறக்குமதியை சார்ந்திருக்கும் இந்தியா போன்ற நாடுகளில் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படும் என அச்சம் எழுந்தது.
இந்நிலையில், ரஷ்யாவிடம் இருந்து 30 நாட்களுக்கு இந்தியா எரிவாயு வாங்குவதற்கு அமெரிக்கா அனுமதி அளித்தது. இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அந்நாட்டு நிதித்துறை செயலாளர் ஸ்காட் பெசன்ட், குறுகிய காலம் எண்ணெய் வாங்குவதால், ரஷ்யாவிடம் பொருளாதாரம் பெரிய அளவில் பயன் அடையாது என்று குறிப்பிட்டுள்ளார். அதே சமயம், சர்வதேச அளவில் எண்ணெய் வர்த்தகத்தை முடக்க நினைக்கும் ஈரானின் முயற்சி முறியடிக்கப்படும் என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இந்த விவகாரத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “நமது கச்சா எண்ணெய் தேவைக்கு நாம் மற்றவர்களிடம் ஏன் அனுமதி பெற வேண்டும். ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்க அமெரிக்கா நமக்கு அனுமதி தருவதா?
When the United States decides to allow India to purchase Russian oil for just 30 days, it raises a fundamental question. Why should India need another country’s approval to secure its own energy needs?
Equally troubling is the sinking of the unarmed Iranian warship IRIS Dena by…
— M.K.Stalin – தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) March 6, 2026
ரஷ்யாவிலிருந்து 30 நாட்களுக்கு மட்டுமே இந்தியா எண்ணெய் வாங்க அமெரிக்கா முடிவு செய்து என்பது அடிப்படை கேள்வியை எழுப்புகிறது. தனது சொந்த எரிசக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்ய இந்தியாவுக்கு ஏன் மற்றொரு நாட்டின் ஒப்புதல் தேவை? வெளியுறவுக் கொள்கையில் மத்திய பாஜக அரசு சமரசம் செய்துள்ளது. சர்வதேச அரங்கில் இந்தியாவின் மரியாதை, தேசிய நலன், இறையாண்மை காக்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.


