Last Updated:
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எரிபொருள் வாங்க அமெரிக்கா அனுமதி அளித்திருப்பதை சு. வெங்கடேசன் எம்.பி. விமர்சித்துள்ளார்.
ரஷ்யாவிடம் இருந்து 30 நாட்களுக்கு இந்தியா எரிபொருள் வாங்குவதற்கு அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், எண்ணெய் போக்குவரத்தின் முக்கிய வழித்தடமான ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியது. இதனால், எண்ணெய் வர்த்தகத்தில் பெரும் அளவில் இறக்குமதியை சார்ந்திருக்கும் இந்தியா போன்ற நாடுகளில் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படும் என அச்சம் எழுந்தது.
தற்சமயத்திற்கு போதுமான அளவு கச்சா எண்ணெய் கையிருப்பில் உள்ளதாக கூறிய மத்திய அரசு, எரிபொருள் இறக்குமதிக்கு மாற்று வழியை ஆய்வு செய்து வருவதாக கூறியது. இந்நிலையில், ரஷ்யாவிடம் இருந்து 30 நாட்களுக்கு இந்தியா எரிபொருள் வாங்குவதற்கு அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது.
President Trump’s energy agenda has resulted in oil and gas production reaching the highest levels ever recorded.
To enable oil to keep flowing into the global market, the Treasury Department is issuing a temporary 30-day waiver to allow Indian refiners to purchase Russian oil.…— Treasury Secretary Scott Bessent (@SecScottBessent) March 6, 2026
இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அந்நாட்டு நிதித்துறை செயலாளர் ஸ்காட் பெசன்ட், குறுகிய காலத்திற்கு எண்ணெய் வாங்குவதால், ரஷ்யாவிடம் பொருளாதாரம் பெரிய அளவில் பயன் அடையாது என்று குறிப்பிட்டுள்ளார். அதே சமயம், சர்வதேச அளவில் எண்ணெய் வர்த்தகத்தை முடக்க நினைக்கும் ஈரானின் முயற்சி முறியடிக்கப்படும் என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கியதால், இந்தியாவிற்கு 50 விழுக்காடு அபராத வரி விதித்திருந்த அமெரிக்கா, ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தியதாக கூறி, அந்த வரியை ரத்து செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
ரஷ்ய நாட்டிடமிருந்து எரிபொருள் வாங்கிக்கொள்ள இந்தியாவுக்கு 30 நாட்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது அமெரிக்க அரசு.
நாம் எங்கே, எதை, எத்தனை நாட்களுக்கு வாங்க வேண்டுமென அமெரிக்கா தீர்மானிக்கிறது.தேசத்தை நிரந்தரமாகவே அடகுவைத்துள்ள மோடி அரசு வரலாற்றின் வெட்கக்கேடு.#IndiaUsTradeDeal… https://t.co/l3Ys7hz1Zj pic.twitter.com/l3Ra569alm
— Su Venkatesan MP (@SuVe4Madurai) March 6, 2026
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எரிபொருள் வாங்க அமெரிக்கா அனுமதி அளித்திருப்பதை சு. வெங்கடேசன் எம்.பி. விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “ரஷ்ய நாட்டிடமிருந்து எரிபொருள் வாங்கிக்கொள்ள இந்தியாவுக்கு 30 நாட்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது அமெரிக்க அரசு. நாம் எங்கே, எதை, எத்தனை நாட்களுக்கு வாங்க வேண்டுமென அமெரிக்கா தீர்மானிக்கிறது. தேசத்தை நிரந்தரமாகவே அடகுவைத்துள்ள மோடி அரசு வரலாற்றின் வெட்கக்கேடு” எனத் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி – சு. வெங்கடேசன் எம்.பி. விமர்சனம்


