Last Updated:
தற்சமயத்திற்கு போதுமான அளவு கச்சா எண்ணெய் கையிருப்பில் உள்ளதாக கூறிய மத்திய அரசு, எரிபொருள் இறக்குமதிக்கு மாற்று வழியை ஆய்வு செய்து வருவதாக கூறியது.
ரஷ்யாவிடம் இருந்து 30 நாட்களுக்கு இந்தியா எரிபொருள் வாங்குவதற்கு அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், எண்ணெய் போக்குவரத்தின் முக்கிய வழித்தடமான ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியது.
இதனால், எண்ணெய் வர்த்தகத்தில் பெரும் அளவில் இறக்குமதியை சார்ந்திருக்கும் இந்தியா போன்ற நாடுகளில் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படும் என அச்சம் எழுந்தது.
தற்சமயத்திற்கு போதுமான அளவு கச்சா எண்ணெய் கையிருப்பில் உள்ளதாக கூறிய மத்திய அரசு, எரிபொருள் இறக்குமதிக்கு மாற்று வழியை ஆய்வு செய்து வருவதாக கூறியது.
இந்நிலையில், ரஷ்யாவிடம் இருந்து 30 நாட்களுக்கு இந்தியா எரிபொருள் வாங்குவதற்கு அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது.
இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அந்நாட்டு நிதித்துறை செயலாளர் ஸ்காட் பெசன்ட், குறுகிய காலம் எண்ணெய் வாங்குவதால், ரஷ்யாவிடம் பொருளாதாரம் பெரிய அளவில் பயன் அடையாது என்று குறிப்பிட்டுள்ளார்.
அதே சமயம், சர்வதேச அளவில் எண்ணெய் வர்த்தகத்தை முடக்க நினைக்கும் ஈரானின் முயற்சி முறியடிக்கப்படும் என்றும் விளக்கம் அளித்துள்ளார்.


