தென் மாகாணத்தின் சில இடங்களிலும், களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் ஒரு சில இடங்களிலும் இன்று மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவக்கூடும்.
அதேவேளை, மத்திய, சப்ரகமுவ, வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படலாம்.
அதிகாலை வேளை
இதனால் அதிகாலை வேளைகளில் வாகனங்களைச் செலுத்தும் சாரதிகள் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

நாட்டைச் சூழவுள்ள கடல் பிராந்தியங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும்.
காற்று மணித்தியாலத்திற்கு 20 – 30 km வேகத்தில் மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக்கூடும் என்பதுடன், கடல் பிராந்தியங்கள் மிதமான அலையுடன் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

