Last Updated:
நடந்துவரும் சண்டையில் ரேடார் தாக்குதலின் தாக்கம் பெருமளவில் இருக்கும் என சொல்லப்படுகிறது.
ஏவுகணை தாக்குதல்களை முன்கூட்டியே அறியும் வகையில், கத்தாரில் உள்ள அமெரிக்க ரேடாரை ஈரான் தாக்கி உள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்காவின் பெரும் பலமாக அமைந்திருந்தது, AN/FPS-132 என்று அழைக்கப்படும், ஏவுகணை தாக்குதலை அறிந்து எச்சரிக்கும் ரேடார். வளைகுடா பிராந்தியத்தின் மத்தியில் அமைந்துள்ளதால், ஈரான், ஈராக், சிரியா, துருக்கி, மத்திய ஆசிய பகுதிகள், இந்திய பெருங்கடல் பகுதிகளை இந்த ரேடார் கண்காணித்து வந்தது.
குறிப்பாக 5 ஆயிரம் கிலோ மீட்டர் வரை கண்காணித்து எச்சரிக்கை விடுக்கும் இந்த ரேடார், முன்கூட்டியே பதில் தாக்குதல் நடத்தவும் உதவியாக இருந்து வந்தது. இந்நிலையில் இந்த ரேடார் மீது ஈரான் தாக்குதல் நடத்தியிருப்பது அமெரிக்காவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஷாஹேத் டிரோனை வீசி ஈரான் இந்த தாக்குதலை நடத்தி இருக்க கூடும் என கூறப்படுகிறது. நடந்துவரும் சண்டையில் ரேடார் தாக்குதலின் தாக்கம் பெருமளவில் இருக்கும் என சொல்லப்படுகிறது.

