Last Updated:
Israel – Iran War | போர் பதற்றம் காரணமாக ஈரானில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் அண்டை நாடான ஆர்மீனியா நோக்கி இடம்பெயர்ந்து வருகின்றனர்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானில் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகள் இணைந்து கடந்த சனிக்கிழமை தாக்குதலை தொடங்கின. இதற்குப் பதிலடியாக ஈரான் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று துருக்கியில் உள்ள அமெரிக்க ராணுவத் தளத்தை நோக்கி ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவிய நிலையில், அதனை நேட்டோவின் வான் பாதுகாப்பு அமைப்பு இடைமறித்து அழித்தது. தொடர்ந்து ஆறாவது நாளாக இன்று போர் நீடித்து வருகிறது.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 1,097 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இந்நிலையில், போர் பதற்றம் காரணமாக ஈரானில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் அண்டை நாடான ஆர்மீனியா நோக்கி இடம்பெயர்ந்து வருகின்றனர்.


