Last Updated:
டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு நியூசிலாந்து தகுதி பெற்றுவிட்ட நிலையில், இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியாவும், இங்கிலாந்தும் இன்று மோதவுள்ளன.
டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு நியூசிலாந்து தகுதி பெற்றுவிட்ட நிலையில், இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியாவும், இங்கிலாந்தும் இன்று மோதவுள்ளன.
லீக் ஆட்டங்களில் சற்றுத் தடுமாறிய இங்கிலாந்து அணி, சூப்பர் 8 சுற்றில் சரியான நேரத்தில் ஃபார்முக்கு வந்து அதிரடியாக அரையிறுதிக்குள் நுழைந்தது. இந்திய அணி, சூப்பர் 8 சுற்றில் தென்னாப்பிரிக்காவிடம் தோல்வியடைந்தாலும், அதன்பின் டாப் கியரில் அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது.
இதுவரை இருமுறை டி20 உலகக் கோப்பையை வென்றுள்ள அணிகள் எனப் பெருமை பெற்றுள்ள இரு ஹெவி வெயிட்களான இந்தியாவும், இங்கிலாந்தும் மோதுவதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இதில் வென்று இறுதியில் கோப்பையை தட்டித் தூக்கும் அணி டி20 கோப்பையை மூன்றாவது முறையாக வெல்லும் முதல் அணி எனும் பெருமையைப் பெறும்.
2022ல் அரையிறுதியில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்தை 2024-ல் அரையிறுதியில் தோற்கடித்து இந்தியா பழிதீர்த்தது. இத்தகைய பின்னணியுடன் இரு அணிகளும் இன்று இரவு 7 மணி அளவில் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகின்றன.
இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் சரியாக சோபிக்காத நிலையில், சரியான சமயத்தில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியில் ஃபார்முக்கு சஞ்சு சாம்சன் வந்திருப்பது கூடுதல் பலம், பும்ரா, இஷான் கிஷனும் நல்ல பார்மில் உள்ளன, இங்கிலாந்தைப் பொருத்தவரை கேப்டன் ஹேரி புரூக் அதிரடியாக ஆடி வருகிறார். ஆல்வரவுண்டர் வில் ஜேக்சும் சிறப்பாக ஆடி வருகிறார். இப்போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.


