ஈப்போ:
வடக்கு-தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் (North-South Expressway) சிம்பாங் பூலாய் அருகே நேற்று மாலை நிகழ்ந்த கோர விபத்தில் கார் ஒன்று தீப்பற்றி எரிந்ததில், அதன் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
வடக்கு நோக்கிச் செல்லும் நெடுஞ்சாலையின் 284.2-வது கிலோமீட்டர் பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது, பேரா மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை அதிகாரி சபரோட்ஸி நூர் அமாட் தெரிவித்த தகவல்கள்
நேற்று மாலை 6:33 மணியளவில் தீயணைப்புத் துறைக்கு அவசர அழைப்பு வரப்பெற்றது. சிம்பாங் புலாய் தீயணைப்பு நிலைய வீரர்கள் வெறும் 6 நிமிடங்களில் (மாலை 6:39) சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து (Skidded) சாலையோரத்திலிருந்த மரம் ஒன்றின் மீது பலமாக மோதியுள்ளது.
மோதிய வேகத்தில் கார் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதில் கார் சுமார் 80 சதவீதம் முற்றிலும் எரிந்து சாம்பலானது.
தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டபோது, காரின் ஓட்டுநர் இருக்கையில் ஒருவர் உடல் கருகிய நிலையில் இருப்பதைக் கண்டறிந்தனர்.
அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக உறுதி செய்யப்பட்டது. இரவு 7:10 மணியளவில் தீ முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
பலியானவரின் உடல் மேலதிக விசாரணைக்காகப் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.




