Last Updated:
“எங்கேயாவது போய் செத்துவிடு” என்று மனைவி திட்டிக் கொண்டே இருந்ததால், கணவன் தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் கர்நாடகா மாநிலம் சிக்கபள்ளாப்பூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் மனைவியுடன் இருக்கும் போட்டோவை வாட்ஸ்-ஆப் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு இளைஞர் ஒருவர் விபரீத முடிவு எடுத்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. “எங்கேயாவது போய் செத்துவிடு” என்று மனைவி திட்டியதால் உயிரை மாய்த்துக் கொண்டதன் பின்னணி என்ன?
இப்படி எந்நேரமும் இன்ஸ்டாகிராமில் மூழ்கிய திருமணமான பெண், இளைஞர் ஒருவரின் ரகசிய காதல் வலையில் விழுந்ததால் ஒட்டுமொத்த குடும்பமும் நிர்மூலமாகியுள்ளது. செல்வ செழிப்புடன் கணவர் இருந்தவரை உருகி உருகி காதலித்தவர், திடீரென தடம் மாறியுள்ளார். வழி தவறியவரை திரும்பவும் பெற்றோர் அழைத்து வந்த நிலையில், பெண்ணின் கணவர் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இறந்துள்ளார். மரணத்தில் உள்ள மர்மம் விலகுமா?
கர்நாடக மாநிலம் சிக்கபள்ளாப்பூர் அருகே குண்ட்லஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் முனிராஜு. 13 ஆண்டுகளுக்கு முன்பு சுனிதா என்பவரை திருமணம் செய்துள்ளார். முனிராஜுவின் பெற்றோர் இல்லாததால் எல்லாம் தனது மனைவிதான் என்று இருந்துள்ளார். பொருளாதார ரீதியாக நல்ல நிலையில் இருந்ததால், இல்லற வாழ்க்கையும் இனிமையாக அமைந்துள்ளது.
குழந்தை குட்டி என ஆன நிலையில் முனிராஜுவின் நிதி நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது. இதனால், தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அதே வேளையில் கணவன் வேலைக்கு சென்றதும், சுனிதா இன்ஸ்டாகிராமில் மூழ்கியுள்ளார். வீட்டு வேலை எதையும் செய்யாமல் இன்ஸ்டாவில் ரீல்ஸ் வீடியோ பதிவிடுவதையே பிரதான தொழிலாக கொண்டுள்ளார். மேலும், இன்ஸ்டாகிராமில் இளைஞர் ஒருவருடன் அரட்டை அடித்தே காலத்தை கழித்துள்ளார்.
இப்படியாக இருந்தவர், திடீரென கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டா காதலனுடன் சென்றுள்ளார். பின்னர், சுனிதாவின் பெற்றோர் அறிவுரை கூறி அவரை திரும்ப அழைத்து வந்துள்ளனர். இருந்தபோதும், தொட்டதற்கு எல்லாம் கணவர் முனிராஜுவை குறை கூறிக்கொண்டே இருந்துள்ளார். அதிலும் அடிக்கடி “தனக்கு நீ வேண்டாம்… எங்கேயாவது போய் செத்துவிடு…” என்று சொல்லி திட்டியுள்ளார்.
“எங்கேயாவது போய் செத்துவிடு” என்று மனைவி திட்டிக் கொண்டே இருந்ததால், கணவன் தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் குண்ட்லஹள்ளி கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
“நீ வேண்டாம்… எங்கேயாவது போய் செத்துவிடு…” அடிக்கடி குத்திப் பேசி காயப்படுத்திய மனைவி… விரக்தியில் உயிரை மாய்த்துக்கொண்ட கணவன்…


