• Login
Thursday, March 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலுக்கு 2 மாதங்கள் இடைக்கால ஜாமீன் | Jet Airways founder Naresh Goyal gets interim bail for 2 months on medical grounds

GenevaTimes by GenevaTimes
May 25, 2024
in வணிகம்
Reading Time: 5 mins read
0
ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலுக்கு 2 மாதங்கள் இடைக்கால ஜாமீன் | Jet Airways founder Naresh Goyal gets interim bail for 2 months on medical grounds
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மும்பை: ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலுக்கு 2 மாதங்கள் இடைக்கால ஜாமீன் வழங்கி மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன் நிமித்தமாக கோயல் தனது பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இந்த இரண்டு மாத காலங்களும் அவர் பிணை விதிகளை முழுமையாக பின்பற்றும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல், எஸ்பிஐ, பஞ்சாப் நேஷனல் வங்கி உட்பட 8 வங்கிகளிடமிருந்து ரூ.5,716 கோடி கடன் பெற்று சட்டத்துக்குப் புறம்பான வழிகளில் மடைமாற்றியுள்ளார் என்று குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், அவருடைய மனைவி கடுமையாக உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் தனக்கு 2 மாதங்கள் ஜாமீன் வேண்டுமென கோயல் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதனை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு இரண்டு மாதங்களுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

வழக்கு பின்னணி: ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் 1992-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. முன்னணி இடத்தில் இருந்த ஜெட் ஏர்வேஸ் 2017-ம் ஆண்டுப் பிறகு நஷ்டத்தைச் சந்திக்கத் தொடங்கியது. இழப்பு அதிகமான நிலையில், 2019 ஏப்ரல் மாதம் ஜெட் ஏர்வேஸ் அதன் விமான சேவையை முழுமையாக நிறுத்தியது. இந்நிலையில், ஜெட் ஏர்வேஸின் நிறுவனர் நரேஷ் கோயல் மற்றும் அவரது மனைவி அனிதா கோயல் ரூ.538 கோடி கடன்பெற்று மோசடி செய்துள்ளதாக கனரா வங்கி அளித்த புகாரின் பெயரில் கடந்த மே மாதம் சிபிஐ வழக்குப் பதிவு செய்து சோதனை நடத்தியது.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் வங்கிகளில் இருந்து பெற்ற கடன்களை நிறுவனச் செயல்பாடுகள் சார்ந்து இல்லாமல் வேறு விஷயங்களுக்கு பயன்படுத்தியுள்ளது என்று தனது விசாரணையின் அடிப்படையில் சிபிஐ தெரிவித்தது. அமலாக்கத் துறையும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் மீது பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணையை தொடங்கியது. கடந்த செப்டம்பர் மாதம் நரேஷ் கோயலை அமலாக்கத் துறை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.



Read More

Previous Post

இலங்கையை புதுமுக வீரர்களுடன் எதிர்கொள்ளும் தென் ஆபிரிக்கா – Tamil Sports News, vilayattu, Sports News in Tamil, Latest Football, Cricket News Updates, விளையாட்டு செய்திகள்

Next Post

இந்தியா, நேபாளத்துக்கு அடுத்து இந்துக்கள் அதிகம் வசிக்கும் 3வது நாடு எது தெரியுமா..? தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!

Next Post
இந்தியா, நேபாளத்துக்கு அடுத்து இந்துக்கள் அதிகம் வசிக்கும் 3வது நாடு எது தெரியுமா..? தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!

இந்தியா, நேபாளத்துக்கு அடுத்து இந்துக்கள் அதிகம் வசிக்கும் 3வது நாடு எது தெரியுமா..? தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin