ஈரானுக்கு எதிரான போருக்கு பிறகு எண்ணெய் விலை குறையும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:-
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மேற்கொண்ட நடவடிக்கைக்கு அமெரிக்காவில் வாழும் ஈரானிய மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மேற்கொண்ட நடவடிக்கை
லொஸ் ஏஞ்சல்ஸ் நகரின் தெருக்களில் பலர் நன்றி, நன்றி எனக் கூறி தங்கள் ஆதரவை தெரிவிப்பதை காண முடிகிறது.இதை செய்யப்பட வேண்டிய ஒன்றாகவே மக்கள் உணர்கிறார்கள்.

கொஞ்ச காலத்திற்கு எண்ணெய் விலை சற்று அதிகமாக இருக்கும். ஈரானுக்கு எதிரான போருக்கு பின் எண்ணெய் விலை குறையும். முன்பை விட குறையும் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

