Last Updated:
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றத்தால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமான சேவைகள் முடங்கிய நிலையில், 3 நாட்களுக்குப் பிறகு விமான சேவை மீண்டும் தொடங்கியுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றத்தால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமான சேவைகள் முடங்கிய நிலையில், 3 நாட்களுக்குப் பிறகு விமான சேவை மீண்டும் தொடங்கியுள்ளது.
துபாய், அபுதாபியில் சில நிறுவனங்கள் விமான சேவையைத் தொடங்கியுள்ளன. முதற்கட்டமாக 3 மணி நேரத்தில் 15 சிறப்பு விமானங்கள் புறப்பட்டுச் சென்றன. அதன்படி, துபாயில் இருந்து பெங்களுக்கு முதல் விமானம் நேற்று இரவு புறப்பட்டு வந்தது. அதேபோல, அபுதாபியில் இருந்து புறப்பட்ட முதல் விமானம் நேற்று இரவு பெங்களூரு வந்தடைந்தது.
இந்நிலையில், சவுதி அரேபியாவின் Jeddah நகரில் இருந்து இன்று 10 சிறப்பு விமானங்கள் இயக்கப்படும் என இண்டிகோ அறிவித்துள்ளது. ஏர் இந்தியா நிறுவனம் இன்று முதல் மஸ்கட்டில் இருந்து மும்பை, திருச்சி, கொச்சி உள்ளிட்ட நகரங்களுக்கு விமானங்களை இயக்குகிறது.