ஈரானின் தொடர்ச்சியான தாக்குதல்களை அடுத்து பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு தனது ராஸ் தானா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை சவுதி அரேபியா திங்களன்று மூடியது
இரண்டு ட்ரோன்கள் சுத்திகரி்பு நிலையப்பகுதியில் இடைமறிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அரசு எண்ணெய் நிறுவனமான சவுதி அரம்கோ அதன் ஒரு நாளைக்கு 550,000 பீப்பாய்கள் கொண்ட ராஸ் தனுரா சுத்திகரிப்பு நிலையத்தில் செயல்பாடுகளை நிறுத்தியதாக சவுதி அதிகாரிகள் தெரிவித்தனர்.
எண்ணெய் விலைகளை உயர்த்தக்கூடும்
முன்னெச்சரிக்கையாக சில சுத்திகரிப்பு அலகுகள் மூடப்பட்டன, ஆனால் எரிபொருள் மற்றும் பெட்ரோலிய பொருட்களின் உள்நாட்டு விநியோகம் பாதிக்கப்படவில்லை என்று சவுதி அரசு செய்தி நிறுவனமான SPA ஒரு எரிசக்தி அமைச்சக அதிகாரியை மேற்கோள் காட்டி கூறியது.

சவுதியின் இந்த நடவடிக்கை உலகளாவிய எண்ணெய் விலைகளை உயர்த்தக்கூடும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

