• Login
Tuesday, March 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

ஈரான் உச்சபட்ச தலைவர் கமேனி உயிரிழப்பு: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
March 3, 2026
in உலகம்
Reading Time: 1 min read
0
ஈரான் உச்சபட்ச தலைவர் கமேனி உயிரிழப்பு: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இது தொடர்பான அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “வரலாற்றில் மிகவும் மோசமான மனிதரான காமெனி உயிரிழந்துவிட்டார். இது ஈரான் மக்களுக்கு மட்டுமல்லாமல், அமெரிக்க மக்களுக்கும் கிடைத்துள்ள நீதி.

உலகெங்கிலும் உள்ள பல நாடுகளைச் சேர்ந்த ஏராளமானோர் கமேனி மற்றும் அவரது குழுக்களால் கொல்லப்பட்டுள்ளனர். நமது உளவுத்துறை மற்றும் அதிநவீன கண்காணிப்பு அமைப்புகளை அவரால் தவிர்க்க முடியவில்லை, மேலும் இஸ்ரேலுடன் நெருக்கமாகப் பணியாற்றியதால், அவரால் அல்லது அவருடன் கொல்லப்பட்ட மற்ற தலைவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை.” என தெரிவித்துள்ளார். 

யார் இந்த ஆயதுல்லா அலி கமேனி:  ஈரானின் ஆன்மீகத் தலைவர் மட்டுமல்ல, அந்த நாட்டின் அரசியல் மற்றும் ராணுவ அதிகாரத்தின் உச்சப்புள்ளியும் ஆவார். 1939-ல் பிறந்த இவர், 1979-ல் நடந்த இஸ்லாமியப் புரட்சியில் முக்கியப் பங்கு வகித்தார். புரட்சிக்குப் பிறகு ஈரானின் அதிபராகப் பதவி வகித்த இவர், 1989-ல் முதல் உச்ச தலைவர் ருஹோல்லா கொமேனியின் மறைவுக்குப் பிறகு அந்தப் பொறுப்பிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஈரானின் அரசியலமைப்பின்படி, உச்ச தலைவர் என்பது அதிபரை விடவும் அதிக அதிகாரம் கொண்ட பதவியாகும். ராணுவம், நீதித்துறை, ஊடகங்கள் மற்றும் வெளியுறவுக் கொள்கை என அனைத்திலும் இவருடைய முடிவே இறுதியானது. குறிப்பாக, ஈரானின் மிகவும் பலம் வாய்ந்த ‘புரட்சிகர காவல் படை’ (IRGC) நேரடியாக இவரது கட்டுப்பாட்டில் இயங்குகிறது.

பல தசாப்தங்களாக ஈரானை ஒரு மதச்சார்பற்ற நாடாக மாற்றத் துடிக்கும் மேற்கத்திய நாடுகளுக்கு சவாலாக, இஸ்லாமியக் கொள்கைகளின் அடிப்படையில் நாட்டை வழிநடத்தி வருகிறார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இவரைத் தீர்க்கமாக எதிர்ப்பதற்குப் பின்னால் மிக முக்கியமான அரசியல் மற்றும் பாதுகாப்பு காரணங்கள் உள்ளன.

முதலாவதாக, இஸ்ரேலை ஒரு நாடாக அங்கீகரிக்க கமேனி மறுப்பதோடு, அதை “புற்றுநோய் கட்டி” என்று விமர்சித்து வருகிறார். இஸ்ரேலுக்கு எதிராகப் போராடும் ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா போன்ற அமைப்புகளுக்கு ஈரான் வழங்கும் ஆயுத மற்றும் நிதி ஆதரவு, இஸ்ரேலின் பாதுகாப்புக்கு நேரடி அச்சுறுத்தலாக உள்ளது.

இரண்டாவதாக, ஈரானின் அணுசக்தித் திட்டம். கமேனியின் தலைமையிலான ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது, இது மத்திய கிழக்கில் அமெரிக்காவின் செல்வாக்கைச் சிதைக்கும் என வாஷிங்டன் அஞ்சுகிறது. மூன்றாவதாக, பிராந்திய ஆதிக்கம். சிரியா, லெபனான், ஏமன் மற்றும் ஈராக் போன்ற நாடுகளில் ஈரானின் ஆதரவு பெற்ற குழுக்கள் மூலமாக அமெரிக்காவின் நலன்களுக்கு எதிராக கமேனி செயல்பட்டு வருகிறார்.

இதன் காரணமாகவே, ஈரானில் ‘ஆட்சி மாற்றம்’ கொண்டு வரவும், கமேனியின் அதிகாரத்தை முடக்கவும் அமெரிக்காவும் இஸ்ரேலும் தற்போது தீவிரமான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளன

Read More

Previous Post

குவைத்தில் வீழ்ந்த ஐக்கிய அமெரிக்க போர் விமானங்கள்

Next Post

புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தின் இறுதி கட்டத்தில் மலேசியாவும் பிரான்சும் | Makkal Osai

Next Post
புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தின் இறுதி கட்டத்தில் மலேசியாவும் பிரான்சும் | Makkal Osai

புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தின் இறுதி கட்டத்தில் மலேசியாவும் பிரான்சும் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin